திடீரென முடிவுக்கு வந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல்.! மகாநதி சீரியலுக்கு தாவிய ஹீரோ சுவாமிநாதன்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ஹீரோவாக நடித்த சுவாமிநாதன் தற்போது புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொடர் தான் ,’மகாநதி’. நான்கு சகோதரர்களின் கதை என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பான பல கட்டங்களை எட்டி வருகிறது. சகோதரிகளின் தந்தையிடம் இருந்து நிலத்தை பிடுங்கிக் கொண்டு அவர்களை ஊரையே காலி செய்து அனுப்பி விடுகிறார் வில்லன் பசுபதி. ஊரை விட்டுச் சென்ற அவர்கள் வீடு கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென முடிவுக்கு வந்த 'காற்றுக்கென்ன வேலி' சீரியல்.! மகாநதி சீரியலுக்கு தாவிய ஹீரோ சுவாமிநாதன்.! 1

அவர்கள் எந்த வீட்டை தேடிச் சென்றாலும் பசுபதி அங்கே வந்து வீடு கிடைக்காமல் செய்து விடுகிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் போது ப்ரோமோவில் குமரன், கங்கா, காவேரி என அனைவரும் இணைந்து ஒரு வீட்டை பார்க்க செல்கின்றனர். அப்போது வீடு மிக நன்றாக இருப்பதாகவும் இந்த வீட்டிலேயே இருந்துவிடலாம் எனவும் முடிவெடுக்கின்றனர். அப்போது அங்கு வரும் பசுபதி வீட்டு உரிமையாளரை இவர்களுக்கு வீடு கொடுக்க கூடாது என்று சொன்னேன் அல்லவா? என சொல்லி மிரட்டுகிறார். அப்போது உரிமையாளரின் மகன் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். அவர் வேறு யாருமில்லை ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சுவாமிநாதன் தான்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அவர் புதிய சீரியலில் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ‘மகாநதி’ சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அவர் காவேரிக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்