Categories: சமூகம்

வடமாநிலங்களில் நிலவும் பணி பொழிவு! பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து!!

வெளியிட்டது
வடமாநிலங்களில் நிலவும் பணி பொழிவு! பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து!! 1

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை வரை 46 விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

இதே போல் டெல்லியில் ரயில்களும் காலதாமதமாகவே புறப்பட்டு செல்லகிறது. கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர. கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

இதே நிலமை தான் மற்ற வடகிழக்கு மாநிலங்களான பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே வருகிற வாகனம் கூட தெரியாத அளவிற்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்