யாருய்யா நீ!!மேக்கப் போட்டு நடிகர்களை போல தன்னை உருமாற்றி கொள்ளும் நபர்.

வெளியிட்டது

இந்த நவீன காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய திறமையை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் உண்மையில், பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தவர்களும் பல. திறமை எங்கு இருந்தாலும் அதனை நம் மக்கள் பாராட்ட தவறுவதில்லை.

இப்பொது ட்விட்டர் வலைத்தளத்தில் பயணத்தில் ஒருவர் தன்னுடைய திறமையை வேறு கோணத்தில் வெளிப்படுத்தி ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார். மேக்கப் காலையில் வல்லுநர் ஆன இவர் தன்னுடைய பக்கத்தில் தானே தனக்கு மேக்கப் செய்து பிரபல நடிகர்களின் பட லுக்கில் தோன்றி அசத்தி வருகிறார்.

யாருய்யா நீ!!மேக்கப் போட்டு நடிகர்களை போல தன்னை உருமாற்றி கொள்ளும் நபர். 1

பீஸ்ட் பட விஜய், விக்ரம் பட கமல், புஷ்பா பட அல்லு அர்ஜுன், கே.ஜி.எஃப் பட யஷ் என பலரை பலரையும் போல் தன்னை உருமாற்றி கொண்டு வீடியோக்கள் வெளியீட்டு வருகிறார். பயங்கர ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது இவருடைய இந்த ட்ரான்ஸ்பர்மேஷன்.

சாதாரணமாக யார் சாயலிலும் இல்லாத இவர், திடீரென மேக்கப் போட்டவுடன் கண்டுபுடிக்க முடியாத அளவிற்கு மற்றவர்களை போல் ஆச்சு அசலாக மாறிவிடுகிறார். ட்விட்டர் தளத்தில் இருக்குமிவருடைய உண்மையான பெயர் இன்னும் தெரியவில்லை.ட்விட்டர் பக்கத்திலும் புனை பெயர் ஒன்றை பயன்படுத்தி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவருடைய மேக்கப் போட்டோக்கள் சில,

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்