Categories: சினிமா

மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் வெளியானது..!

வெளியிட்டது

மலையாளத்தின் மூத்த நடிகராக விளங்கி வரும் மோகன்லால் நடித்திருக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படமும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களும் நேரடியாக மோத இருக்கின்றன் மலையாள உலகின் டாப் ஹீரோவாக இருப்பவர் மோகன்லால். இவரை ‘லால் ஏட்டன்’ என்று மலையாளிகள் அன்போடு அழைப்பது வழக்கம்.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அரபிக் கடலின் சிங்கம்’ எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டீசர் வெளியானது..! 1
இந்த படம் படுதோல்வி அடைந்ததையடுத்து, தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் மோகன்லால். இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டில் 2k கிட்ஸ் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மலையாளத்தில் அவர் நடித்த சில படங்கள் ஓடாத நிலையில், அவர் கேமியாவாக நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


படம் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் ‘தங்கலான்’ படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ போட்டியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்