எப்போதுமே மக்களுக்கு ராஜா காலத்து கதைக்கள படங்கள் மேல் ஒரு பிரியம் இருப்பது சகஜமே. எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று சிவா கார்த்திகேயன் வரை அனைவருமே அது போன்ற ஒரு ரோலில் எதோ ஒரு படத்தில் தோன்றி இருப்பார்கள். மக்களுக்கு பிடித்து போவதால் என்னவோ நடிகர்களும் அந்த மாதிரியான ஒரு மிக சிறந்த படத்தில் நடிக்க வேண்டும் என எப்போதுமே ஆசை படுவார்கள். இங்கு மட்டுமில்லை ஹோலிவுட்டிலும் இந்த மாதிரியான சரித்திர பின்னனி கதைகள் தான் அதிகம் எடுக்கப்படுவதும்.

தமிழ் கலையுலகில் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி கிரிஷ்ணமூர்த்தி. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், தியாக பூமி, பார்த்திபன் கனவு, அலை ஓசை போன்ற பல சிறப்பு மிகு நாவல்களை எழுதியுள்ளார். இவர் சாகித்ய அகாடமி விருது வென்றவர். 1950இல் சோழ சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து இவர் இயற்றிய புனைகதையான ” பொன்னியின் செல்வன்” மிக சிறந்த வரவேற்ப்பை அப்போதே பெற்றது.

அன்றைய காலகட்டங்களில் சரித்திர படங்கள் மிக அதிகம் என்பதால், மக்கள் திலகம் இந்த படத்தை எடுக்க எண்ணினார். ஆனால் அவருக்கு அது கை கூடவில்லை. படிப்போருக்கு இந்த கதையில் மிகவும் கவரும் ஒரே பாத்திரம் என்றால் அது வந்திதேவனே. அதனாலேயே என்னவோ பலரும் அந்த கதாபாத்திரமே வேண்டும் என ஆசைப்பட்டனர். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கவிருந்த பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடிக்க விரும்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்கவிருந்த படத்திலும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் தான் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யாருக்கும் கைகூடாமல் இப்பொது நடிகர் கார்த்திக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் என பலரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது . இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது, இதற்கான ப்ரோமோஷனில் இறங்கியுள்ள படக்குழு படத்தின் டீசரை இன்று வெளியிடபடவுள்ளது.