Categories: சினிமா

பொன்னியின் செல்வனில் வைரமுத்துக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? போட்டு உடைத்த மணிரத்னம்

வெளியிட்டது

தனது படங்களில் வைரமுத்துவை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு தற்போது மணிரத்னமே விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். இவர் பல நல்ல படங்களை தமிழ் திரையுலகுக்கு வழங்கி இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட நாவலை மையப்படுத்தி ஒரு கதையை இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழின் மிகப் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வன் சோழ மன்னர்களின் வரலாற்றையும், அவர்களது வீரத்தை எடுத்து கூறும் வகையிலும் எழுதப்பட்டது. இதை படமாக்கும் முயற்சியில் எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் முயன்று இறுதியில் தோற்றுப் போயினர். தற்போது இந்த படத்தை எடுத்து சாதனை புரிந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

பொன்னியின் செல்வனில் வைரமுத்துக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? போட்டு உடைத்த மணிரத்னம் 1

இந்த படம் பற்றி கூறுகையில் இது தன்னுடைய 40 ஆண்டு கால கனவு என்றும், அந்த கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதனால் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தற்போது இந்த டீம் தொடங்கி இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் படக்குழு சென்று பிரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி என அனைத்து ஊர்களுக்கும் இந்த டீம் செல்ல உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மணிரத்தினம் இடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக கவிஞர் வைரமுத்து குறித்து அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியே பல நாவல்கள் வெளியீட்டு விழாவின்போது வைரமுத்துவை பக்கத்தில் உட்கார வைத்து விழாவை நடத்தி இருக்கிறார். ஆனால் தமிழின் பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வனை நீங்கள் படமாக எடுத்து இருக்கிறீர்கள். ஆனால் வைரமுத்துவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் வைரமுத்துவை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை. அதே நேரத்தில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதாலேயே வைரமுத்துவை அழைக்கவில்லை என்று பேசினார். ஆனால் இதை பார்த்த வைரமுத்து ரசிகர்கள், இந்த பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால், ஏ ஆர் ரகுமானுக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று கேள்வியும் மணிரத்தினத்திற்கு எழுப்பி வருகின்றனர்.

Youtube Video Code Embed Credits: At Cine Media

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்