“கெஞ்சி கேட்டுக்கிறேன்..இனிமேலாவது இதெல்லாம் சாப்பிடாதீங்கய்யா”!!”கண்ணீர் மல்க அழுது கொண்டே பேட்டி அளித்த மன்சூர் அலி கான்”!!

வெளியிட்டது

சினிமாவில் நிறைய நடிகர்கள் நடித்தாலும், காலப்போக்கில் ஒருசிலர் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் இருக்கும் படி இருப்பார்கள். 1970-80களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரையும் தாண்டி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் ஷங்கர், எம்.ஆர்.ராதா, ரவிச்சந்திரன் என பல நாயகர்கள் இருந்தும் நமக்கு இப்போது அதிகம் ஞாபகம் இருப்பது ஒரு சிலர் மட்டுமே. அது காலப்போக்கில் சாதாரணமாக நடக்க கூடிய விஷயங்களே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கெஞ்சி கேட்டுக்கிறேன்..இனிமேலாவது இதெல்லாம் சாப்பிடாதீங்கய்யா"!!"கண்ணீர் மல்க அழுது கொண்டே பேட்டி அளித்த மன்சூர் அலி கான்"!! 1

அந்த வகையில் 1990களில் மிகவும் பிரபலமான வில்லனாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலி கான். இயக்குனர் செல்வமணி இயக்கிய விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” படத்தின் மூலம் மிக பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றார். முதல் படம் இது இல்லை என்றாலும், இவருக்கு மக்களிடம் அறிமுகம் கொடுத்த படம் இதுவே. இவர் அந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த வீரப்பன் கதாபாத்திரத்தில், “வீரபத்திரன்” ஆகா படத்தில் தோன்றி படம் பார்த்த ரசிகர்களை மிரட்டினார்.

பின்னர் தொடர்நது ஆக்ஷன் படங்களில் வில்லன் என்றால் அது நடிகர் மன்சூர் அலி கானே என்று கூறுமளவில் வெளிவந்த முக்கால்வாசி படங்களை கொடூர வில்லனாக தோன்றி மக்களை மிரட்டியெடுத்தார். விஜயகாந்தின் படங்களில் பெரும்பாலும் இவரே வில்லன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பெரும்பாலும் வில்லனாக நடித்து வந்தார்.

முன்னையில் இருந்த அப்போதைய நடிகர்கள் பலருக்கும் முக்கிய வில்லன் நடிகர் என்றால் அது இவரே. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அது நம்பியார் கொடிகட்டி பறந்ததை போல, அவரை போலவே நடிகர் மன்சூர் அலி கானும் கொடிகட்டி பறந்தார். மெல்ல வில்லன் நடிகர் என்பதிலிருந்து சில படங்களில் நாயகனாக நடிக்க துவங்கினார்.

அதிலும் சில காலங்களில் வெற்றியை பெற்ற இவர், 2000ஆம் ஆண்டு துவக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் வாய்ப்பு துவங்கி, பின்னர் 2010ஆம் ஆண்டுகளில் சில சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அறிமுகமான முதலே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி கான்.

இவரின் புகழ் இப்பொது மற்றொரு உச்சத்தை அடைந்துள்ளது. இப்போதைய மிகவும் கவனம் பெற்றுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் மிக பெரிய ரசிகராக தன்னை அறிவித்து வருகிறார். குறிப்பாக கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கிய “கைதி” படத்தில் லோகேஷ் முதலில் நாயகனாக நினைத்தது மன்சூர் அலி கானே. அதை லோகேஷே பின்னர் பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் இன்று காலை மரணமடைந்த திரைப்பட பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவு சென்று ஆறுதல் கூறிவிட்டு, பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசும் போது, ” அண்ணல் வித்யாசாகர் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள் தான் இனிமேலாவது மக்கள் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளை சாப்பிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். மேலை நாடுகளில் மிகவும் தடைசெய்யப்பட்ட இந்த உணவு வகைகளை நம் மக்கள் மிகவு  விரும்பி சாப்பிட்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தியாவில் எப்போதும் விஷம் ஏற்றப்பட்ட விதைகள் இல்லாத காய் வகைகளையே சாப்பிட்டு வருகிறோம். எல்லா காய்களும் போலி உரங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. நான் அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன் இது போன்ற உணவுகளை தடை செய்ய வேண்டும்.” என உருக்கமாக பேசியுள்ளார்.

Video Courtesy – ThanthiTV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்