தலைகீழாக மாறும் வாக்குகள்.! முன்னேறி செல்லும் மாயா.! பூர்ணிமாவுக்கு எந்த இடம் தெரியுமா.?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 52 நாட்களை கடந்துள்ளது. எட்டு வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் ஒன்பதாவது வாரத்திற்கான நாமினேஷன் வாக்கெடுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நமது தமிழ் க்ளிட்ஸ் இணையத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் ரசிகர்களின் மனதை பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது. அதே போல் நமது இணையத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் குறைந்த வாக்கைப் பெறும் போட்டியாளர்கள் பிக்பாஸிலிருந்து வெளியேறும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா, விசித்ரா, மணி, ரவீனா, மாயா, அக்ஷயா, பிராவோ, பூர்ணிமா ஆகிய எட்டு பேர் இருக்கின்றனர்.

தலைகீழாக மாறும் வாக்குகள்.! முன்னேறி செல்லும் மாயா.! பூர்ணிமாவுக்கு எந்த இடம் தெரியுமா.? 1

கடந்த வாரம் எதிர்பாராத திருப்பமாக அனைத்து வெள்ளி ஸ்டார்களையும் விஷ்ணுவிடம் கொடுத்து விஷ்ணுவிற்கு இரண்டு பேரை நேரடியாக நாமினினேஷன் செய்யும் அதிகாரத்தை போட்டியாளர்கள் வழங்கியிருந்தனர். விசித்ரா, மணி, ரவீனா ஆகியோர் தங்களிடம் இருந்த ஸ்டார்களை விஷ்ணுவிற்கு வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வாக்கெடுப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்து மாயா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிராவோ மற்றும் அக்ஷயா ஆகிய இருவரும் இருந்து வந்தனர். இதில் ப்ராவோ, அக்ஷயா ஆகியோர் சில சமயம் கடைசி இடங்களை பிடித்தும், சில சமயம் முன்னணிக்கு சென்றும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வந்தனர்.

மூன்று நாட்களில் முடிந்துள்ள நிலையில் தற்போது வாக்கெடுப்பு நிலவரங்களை பார்க்கும் பொழுது அர்ச்சனாவும் விசித்ராவும் எப்பொழுதும் போல முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல கடைசி இடத்தில் இருந்த மாயா, அக்ஷயா மற்றும் பிராவோ பூர்ணிமாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி சென்று கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சேஃப் ஜோனில் இருந்த பூர்ணிமா தற்போது குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இந்த வாக்கெடுப்பு முடிவுகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். அக்ஷயா, பிராவோ போன்ற சுவாரஸ்யம் குறைவான நபர்களை விட்டுவிட்டு ஆட்டத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்று கொண்டிருக்கும் பூர்ணிமாவிற்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை பிராவோ, அக்‌ஷயா சேவ் செய்யப்படும் பட்சத்தில் பூர்ணிமா வெளியேறினால் அது நியாயமான வெளியேற்றமாக இருக்காது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீங்களும் நமது இணையத்தில் எடுக்கப்படும் பிக்பாஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று வாக்களிக்கவும்.! https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்