தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் நடிகை ரவீனா. இவர் விஷாலின் பூஜை படத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். பின்னர் ராட்சசன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார். இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படத்தை தொடர்ந்து மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. நடனத்தின் மீது அதிக ஆர்வம் உள்ள இவர் அடிக்கடி நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போதும் இவர் தொடர்ந்து நடனமாடி வீடியோக்களை வெளியிடுகிறார். இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது இவர் தனது பிறந்தநாளை கோவாவில் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
