“முதல் மீட்டிங்ல செட்டாகல”!! எப்போவுமே சண்டை போட்ட சாகர் தான் முதல பேசுவாரு!! சிரித்துக்கொண்டே தன்னுடைய கணவர் பற்றி பேசியுள்ள மீனா!!

வெளியிட்டது

நடிகை மீனா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாகி இப்பொது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். 6 வயதில் நடிகர் திலகம் ஷிவ்ஜி கணேசன் நடிப்பில் வெளியான “நெஞ்சங்கள்” படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இருப்பினும் 1984ஆம் ஆண்டு நடிகர் ரஜினி, அம்பிகா நடிப்பில் வெளியான “அன்புள்ள ரஜினிகாந்த்” படமே மக்களுக்கு இவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஞாபகம். குழந்தை நட்சத்திரமாகவே 25 படங்களுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"முதல் மீட்டிங்ல செட்டாகல"!! எப்போவுமே சண்டை போட்ட சாகர் தான் முதல பேசுவாரு!! சிரித்துக்கொண்டே தன்னுடைய கணவர் பற்றி பேசியுள்ள மீனா!! 1

தெலுங்கில் 1990ஆம் ஆண்டு வெளியான “நவயுகம்” படம் மூலம் நாயகியை தன்னுடைய 14 வயதில் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி 150க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ரஜினியுடன் “முத்து” படம் நடித்து தமிழகம் மட்டுமின்றி ஜப்பானிலும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். கமலுடன் “அவ்வை ஷண்முகி”, சரத்குமாருடன் “நாட்டாமை”, விஜயகாந்துடன் “சேதுபதி IPS”, அஜித்துடன் “சிட்டிசன்” என 1990ஆம்  முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைத்து படம் நடித்துள்ளார். குறிப்பாக பலவும் மெகா ஹிட் அடித்தவை.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரே நேரத்தில் 1990ஆம் காலகட்டத்தில் திகழ்ந்தார். இன்றளவும் இவரை கண்ணழகி என்றே அழைப்பார்கள். ரசிகர்கள் பலரும் இவரை கண்ணழகி மீனா என்றே அழைத்தனர். இவன், போர்க்களம், எஜமான் படங்களில் சிறப்பாக நடித்ததற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்று அசத்தியுள்ளார்.

பரதநாட்டிய கலைஞரான இவர் 6 மொழிகள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மீனா நடித்திராத கேரக்டர்களே இல்லை என கூறும் அளவிற்கு பல்வேறு வகையிலான கதாபாத்திரங்களிலும் தோன்றி அசத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்ட்ட திருமணத்தில் வித்யாசாகர் ஏன்னும் பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளரை கரம் பிடித்தார். இவரின் மகள் நைனிகா 5 வயதில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

நேற்று நுரையீரல் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 ஆகும். திரையுலக பிரபலங்களும், நட்சத்திரங்களும் பலரும் நடிகை மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள். இந்நிலையில் பழைய மீனாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சிம்பிலி குஷ்பூ” நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்துகொண்டு தன்னுடைய கணவர் வித்யாசாகர் குறித்தும், அவர்கள் திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், “ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவரை பார்க்க, பேச எனக்கு சவுகரியமாக இல்லை. மே மாதம் பேசத் துவங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்தார்கள். பார்த்தா ஆளு “இது ஓகே, ஆனால் இதை விட நல்லது வருமே…அமையுமே” என்றார். அதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாடி…வேண்டாம் என்றேன், அவரிடம் குட்பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பை சொல்லியாச்சு. அதன் பிறகு என் ஆன்ட்டி வந்து “என்னது இது?, இப்படித்தான் கல்யாணத்தை பற்றி பேசி முடிவெடுப்பீர்கள்..பெரியவர்களிடம் கலந்து பேச மாடீர்களா?”என அதட்டிவிட்டு போனார். அப்படித் தான் மீண்டும் பேசி திருமணம் நடந்தது என்றார்.

Video Courtesy – ZeeTamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்