Categories: சினிமா

ரஜினி பிறந்த நாளுக்கு வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய மீனா.! என்ன வீடியோனு பாருங்க.!

வெளியிட்டது

ரஜினியின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீனாவும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் உடன் பங்கேற்று இருக்கும் அவர் ரஜினி மேடை ஏறும் போது தலைவா தலைவா என்று கத்தி கூச்சல் போடும் வீடியோவை பகிர்ந்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்தவர் நடிகை மீனா. பின்னர் இவர் வளர்ந்து நடிகை ஆன பின்னர் அவருடனே சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக முத்து, வீரா, எஜமான் போன்ற படங்கள் ரஜினிகாந்த் மீனா காம்பினேஷனில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களாகும். மீனா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.

ரஜினி பிறந்த நாளுக்கு வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய மீனா.! என்ன வீடியோனு பாருங்க.! 1

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் மாமன் மகள் கதாபாத்திரத்தில் மீனாவும் குஷ்பூவும் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று 73 ஆவது பிறந்தநாள் காணும் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை திரைத்துறையில் கோலொச்சி வரும் அந்த மாபெரும் கலைஞனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி தங்களது பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவித்தும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதனால் தமிழகமே இன்று விழாக்கோலம் பூண்டிருக்கிறது.


இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் ஒரு விழாவிற்கு ரஜினிகாந்துடன் சென்றுள்ள அவர், ரஜினி அருகே அமர்ந்திருக்கிறார். பின்னர் ரஜினிகாந்த் மேடை ஏறியவுடன் அவர் பேச ஆரம்பிக்கும் பொழுது தலைவா தலைவா என்று கத்துகிறார். இந்த வீடியோவை பகிர்ந்து ஹாப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்