விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். இவர் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று அழைத்துக்கொண்டார். கலந்து கொண்ட நாள் முதலே ஏதாவது சண்டை, சர்சரவு என அதிருப்தியை ஏற்படுத்தினார். இதனால் அவரை மக்கள் பாதியிலேயே வெளியேற்றினர். வெளியேறிய பின்பும் பெரிதாக எதுவும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தனது யூடியூப் சேனலில் முண்ணனி நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வந்தார். எதிர்மறை விமர்சனங்கள் மூலம் பிரபலம் ஆகலாம் என்ற கனவில் இருந்தார் மீரா மிதுன். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன்.

இந்த சர்ச்சை பேச்சுக்கள் ஒரு கட்டத்தில் அளவு மீறி போக, ஒரு நாள் லைவ்வில் தனது ஆண் நண்பருடன் பட்டியலின சமூக மக்களையும் தவறாக பேசினார். இதனால் கோபமடைந்த சில கட்சிகள் அவர் மீது புகார் அளித்தனர். இதன் பின் கேரளாவில் சென்று தலைமறைவான அவரை அவரது போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைத்தனர். சில நாட்கள் ஜெயிலில் இருந்த அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் மீரான் மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம், அவர்களின் வழக்கறிஞர் உட்பட யாரும் ஆஜர் ஆகவில்லை.
இதனையடுத்து விசாரணையன்று மீரா மிதுன் ஆஜர் ஆகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவது போல் உள்ளது என்று நீதிபதி கூறினார். மீண்டும் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஜாமினில் அவர் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே இதே போல மார்ச் 23ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து ஆஜர் ஆகி வந்த நிலையில் இன்று மீண்டு எஸ்கேப் ஆகியுள்ளார் மீரா மிதுன். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வர முடியாத படி மீண்டும் அவரை கைது செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.