Categories: சினிமா

Karthi மற்றும் Aravindswamy இணைந்து மிரட்டும் மெய்யழகன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்து அறிமுகமாகிய நடிகர் கார்த்தி. தனது மொத்த நடிப்பையும் காண்பித்து முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்து இருந்தார். அந்த அளவிற்கு தனது எதார்த்த நடிப்பினை காண்பித்து அசத்தியிருப்பார். இப்படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். பல வெற்றிப்படங்களை நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Karthi மற்றும் Aravindswamy இணைந்து மிரட்டும் மெய்யழகன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

தற்போது இவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து முதல் முறையாக நடித்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் வருகிற 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்