Categories: சினிமா

தப்பு செஞ்சிட்டு தப்பிக்க முடியாது இர்பான்…! இதை சும்மா விடமாட்டோம்..! அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி..!

வெளியிட்டது

பிரபல யுடியூபர் இர்பான், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று உணவுகளை ருசிபார்த்து அதனை விமர்சனமாக செய்பவர். இதனால் பல நாடுகளுக்கும் சென்ற அவர் , அங்குள்ள உணவுகள் குறித்து வீடியோ வெளியிட்டு பிரபலமாகி உள்ளார். இவரின் வீடியோக்களை காண்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது இருக்கிறது. தற்போது இவர் உணவு விமர்சனம் மட்டுமில்லாமல் உணவு சமைக்கவும் தொடங்கி இருக்கிறார்.

தப்பு செஞ்சிட்டு தப்பிக்க முடியாது இர்பான்...! இதை சும்மா விடமாட்டோம்..! அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி..! 1

குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் இர்பான். இந்நிலையில் அண்மையில் இவர் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் கரு ஆணா பெண்ணா என வெளிநாட்டில் கண்டறிந்து அதனை வீடியோவாக வெளியிட்டு சிக்கலில் சிக்கி இருந்தார். இது மிகவும் பேசும்பொருளாக இணையத்தில் உருமாறி இருந்தது.தற்போது மனைவியின் பிரசவத்தின் போது, தொப்புள்கொடியை இவரே வெட்டி அதனை வீடியோவாக வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என கூறி உள்ளார். மேலும் இர்பான் மருத்துவ சட்ட விதிமுறைகளை மீறி இதுபோல நடந்துகொண்டு உள்ளார்.சட்ட ரீதியாகவும்,துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும் எனவும். தப்பு செய்தவர்களை காப்பாற்ற முடியாது என கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்