பிரதமர் மோடி முதலில் அவருடைய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என பாலியுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்னும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்தும் பெரியளவில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தன்னை படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு டிகிரி இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அவர் தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் அதேபோல் அவரின் அப்பாவின் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவரின் மொத்த குடும்பத்தின் பிறப்பு சான்றிதழையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும்தான் அவர் மக்களிடம் பிறப்பு சான்றிதழை கேட்க முடியும்.
அப்போது மட்டும்தான் பிரதமர் மோடிக்கு மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்க கேட்கும் உரிமை மோடிக்கு இருக்கும். மோடி முதலில் அதை செய்யட்டும். இந்த சிஏஏ சட்டம் முழுக்க முழுக்க முட்டாள் தனமானது. இந்திய ஒற்றுமைக்கு இது எதிரானது.
இந்த அரசுக்கு பேச தெரியவில்லை. அதனால் மக்கள் பேசுவது இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அவர்களால் ஒரு சிறிய கேள்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு சரியான திட்டமில்லை. அதனால் அவர்கள் கேள்வி கேளும் மக்களை பார்த்து பயப்படுகிறார்கள்” என மத்திய அரசை விமர்சித்துள்ளார்.