முந்தைய கட்டுரையில் மோடியின் அதிகார மையமயமாக்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்த்திருந்தோம். அதேபோல இந்த கட்டுரையில் மாநில-மத்திய நிதி இயக்கத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது பிரிந்து கிடந்த பல தேசம் மற்றும் மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற ஒரு நாட்டினை கட்டமைத்தனர். அவ்வாறு இணைந்த அனைத்து மாகாணத்தையும் இணக்கமாக வைத்திருக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. அதனை விளக்குவது தான் மாநில-மத்திய உறவு எனப்படுகிறது.
அதிகாரம் பகிர்ந்தளிப்பு, நிதி பங்கீடு போன்றவையெல்லாம் இதில் அடங்கும். ஆனால் இத்தகைய உறவில் பல முட்டல் மோதல்கள் நடந்தேறியுள்ளன. மாநில-மத்திய உறவை பற்றி ஆராய ராஜ்மன்னார் கமிட்டியை நியமித்து அப்போதே பரப்பரப்பு காட்டினார் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
மாநிலங்கள் தனி நாடு கோரக்கூடாது என்பது முதல் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு சென்ற மத்திய அரசின் தன்னிசையான விளைவை நாம் இன்று சந்தித்து வருகிறோம். அதன்படி தான் அதிகார மத்தியில் குவிந்ததால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தியாவின் சாட்சியாக இரண்டு பிரதமர்கள் இருக்கிறார்கள். ஒன்று இந்திரா காந்தி மற்றோருவர் நரேந்திர மோடி.
இணக்கதன்மையுடன் கூடிய அரசியலமைப்பை நாம் கொண்டிருக்கும் வேளையில், அதிகார குவியலால் மாநில-மத்திய உறவுகள் சேதமடையும். இதற்கு எடுத்துக்காட்டாக மேற்கு வங்காளத்தை குறிப்பிடலாம்.
மத்திய அரசின் கைகள் இறுகி வரும் அதே வேளையில், பல மாநில அரசுகளின் நிதி திறனும், நிதி நிர்வாகமும் படு மோசமான நிலையில் இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். ரிசர்வ் வங்கயின் சமீபத்திய ஆய்வில், “இந்தியாவின் மாநிலங்கள் மக்கள் தொகையை விட அமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், மைய அரசை விட மாநில அரசு ஒன்றரை மடங்கு அதிகமாக செலவிடுவதாக” கூறியுள்ளது.
வருவாய் அதிகமுள்ள மாநிலங்களின் உதவியுடன் சமநிலையை மீட்டெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை காரணமாக பிற மாநிலங்களின் வருவாய் ஈட்டும் திறனை பாதித்துள்ளது. அதே வேளையில், அதிகாரத்தை ஒரே இடத்தில குவிக்கும் போது, நிதி ஓட்டம் தலைகீழாக மாறி விட்டன. மைய அரசு நிதி அளிக்கும் பொறுப்பிலிருந்து விலகி, மாநில அரசுகளிடமிருந்து அபகரிக்க ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் இன்ன பிற துறைகளின் செயல்பாடுகளுக்காக மத்திய அரசு நிதிகளை ஒதுக்கி நிர்வகித்தால், அதனை நியப்படுத்தி விவாதிக்கலாம். ஆனால் மாநிலத்தோடு தொடர்புடைய சுகாதாரம், கல்வி போன்ற சேவைகளிலும் மத்திய அரசு இடை புகுந்தால் அது உறவுகளில் மோசமான நிலையை உருவாக்கும்.
தற்போது எழுந்துள்ள பொருளாதார மந்தநிலையில் நம் முன்னே இரண்டு விதமான கேள்விகள் எழுந்துள்ளன.
- 2019 தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் காலகட்டத்திலும் மிக மோசமான பொருளாதார மந்த நிலை நிலவிய போதும், பாஜகவால் அதே பிரபலத்தை கட்டமைக்க முடிந்தது எதனால்?
- பொருளாதார மந்தநிலையை குறித்து கவலைக்கொள்ளாத ஒரு அரசிடமிருந்து எதிர்காலத்திற்கான அரசு கட்டமைப்பை எதன் அடிப்படையில் எதிர்பார்க்க முடியும்?
நவம்பர் மாத கருப்பு தினத்திற்கு பிறகான பொருளாதரம் சுருங்கி மக்களும், நிறுவனங்களும் திண்டாடிய போது, உத்திர பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இது குறுகிய கால அரசியல் கொள்கைகள் மற்றும் பெரும்பான்மை ஆதாயங்களுக்காக ஏற்பட்ட வெற்றி என்பதனை ஒப்புக்கொள்வது அவசியம். ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு குழுவுக்கும் கடுமையான பொருளாதாரா நெருக்கடி விளைவுகளை ஏற்படுத்திய “அதிகார ஊழல்” மோடி அரசு, “தேசிய பாதுகாப்பு” என்பதன் கீழ் மறைத்துக்கொள்ள முயல்கிறது. ஆனால் காஷ்மீரின் நிலை அத்தனை அச்சுறுத்தலுக்கும் எடுத்துக்காட்டாய் மறைந்து கிடக்கிறது.
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

