வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.!

மௌனராகம் சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இது இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கதைப்படி ஹீரோ கார்த்திக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மல்லிகா, இரண்டாவது மனைவி காதம்பரி.

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 1

விளம்பரம்

முதல் மனைவிக்கு சக்தி என்ற ஒரு மகளும், இரண்டாவது மணிக்கு மனைவிக்கு ஸ்ருதி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். ஒரு விபத்தில் மல்லிகா இறந்துவிட்டதாக நினைத்து கார்த்திக் இரண்டாவதாக காதம்பரியை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வருவார். அப்போது முதல் மனைவியின் குழந்தை தனது தந்தையை தேடி சென்னைக்கு வந்து, இறுதியில் தந்தையின் வீட்டிலேயே தஞ்சம் புகுந்துவிடும். இதை அறிந்து கொள்ளும் இரண்டாவது மனைவி காதம்பரி அந்த குழந்தையை கொடுமைப்படுத்துவார்.

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 3

விளம்பரம்

பின்னர் மல்லிகா உயிருடன் தான் இருப்பார். அவர் சென்னைக்கு வந்து சக்தியை காதம்பரியின் கொடுமையில் இருந்து காப்பாற்றி யாருக்கும் தெரியாமல் ஒரு ஊரில் சென்று வசித்து வருவார்கள். தற்போது சீசன் 2வில் இந்த குழந்தைகள் வளர்ந்து அண்ணன் வருணை ஷக்தியும், தம்பி தருணை ஸ்ருதியும் திருமணம் செய்து கொள்கின்றனர். வருணுக்கு நெருப்பை பார்த்தாலே பயம். ஏனென்றால் வருணின் தாய் ஒரு நெருப்பு விபத்தில் இறந்திருப்பார். இதை கண்கூடாக பார்த்த வருணனுக்கு நெருப்பு என்றாலே பயமாக இருக்கும். அதனால் வெகு நாட்களாக அவர் மன நல ஆலோசனைப் பெற்று மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார்.

தொடர்புடையவை  அட்வைஸ் செய்யும் விக்ரமன்.! ஓவர் Attitude காட்டும் தனலட்சுமி.! இன்றைய ப்ரோமோ.!

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 5

விளம்பரம்

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வில்லிகள் வில்லத்தனங்களை செய்து வருகின்றனர். வருணின் சொந்த அத்தையே அவரை குணப்படுத்தாமல் வில்லத்தனங்களை செய்து வருகிறார். வருண் பல நாட்களாக மாத்திரை உட்கொண்ட போதிலும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அதற்கு காரணம் வருணின் அத்தை சதி செய்து அவருக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து வருகிறார். இதை வருணின் மனைவி சக்தி தற்போது கண்டுபிடித்து விடுகிறார். இன்றைய எபிசோடில் வருணின் மொபைலில் இருந்து சக்தி பேசுவது போல வருணனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளனர். தான் ஆபத்தில் இருப்பதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் சக்தியை வருணிடம் பேசுவது போல் ஸ்ருதியும், வருணின் அத்தை ஷீலாவும் சதி செய்துள்ளனர்.

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 7

விளம்பரம்

இதற்கு காரணம் காதம்பரியின் தந்தை விஸ்வநாதன் வருணை உயிரோடு எரித்து விடுவதற்காக ஒரு கோவிலுக்கு வர வைத்துள்ளார். வருணும் அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டு விட்டு சக்திக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அந்த கோவிலுக்கு செல்கிறார். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் சக்தியிடம் வேலைக்கார பெண்மணி உண்மைகளை கூறுகிறார். உங்களுக்கு ஏதோ பிரச்சனை வந்தது போல ஒரு மெசேஜ் வந்தது, அதனால் பயந்து கொண்டு வருண் சென்றுள்ளார் என்று வேலைக்கார பெண் கூறுகிறார்.

தொடர்புடையவை  பிபி ஜோடிகள் மேடையில் கதறி கதறி அழுத தாமரை, என்ன காரணம் தெரியுமா?

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 9

விளம்பரம்

இதனால் பதறி அடித்துக் கொண்டு வருண் இருக்கும் இடத்திற்கு சக்தி செல்கிறார். அங்கு சென்று பார்த்தபோது ஒரு வைக்கோல் போரில் நெருப்பை மூட்டி வருணை பயமுறச் செய்து அவரின் உயிரைப் பறிக்க காதம்பரியின் தந்தை விஸ்வநாதன் திட்டமிட்டு இருக்கிறார். இதை அறிந்து கொண்ட சக்தி வருணை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இந்த வார ப்ரோமவில் அத்தை ஷீலா பற்றிய உண்மைகளையும் வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார். இதனால் கோபமடைந்த மனோகர் ஷீலாவின் கன்னத்தில் அறைந்து அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். இனி என்ன நடக்க இருக்கிறது என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

வருணை கொல்ல முயற்சித்த விஸ்வநாதன்.. சரியான நேரத்தில் வந்த சக்தி.. இன்றைய முழு எபிசோட் விவரம்.! 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment