மௌன ராகம் சீரியலில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ அதிரடி திருப்பமாக இருக்கிறது. அதில் வருணின் தாய் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, வருணுடைய தாயை ஷீலா கடத்தி வைத்திருப்பது போன்ற ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம். இது தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளாக இருந்த சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் வளர்ந்து அண்ணன் தம்பிகளாக இருக்கும் வருண் மற்றும் தருண் ஆகியோரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கதை நகர்ந்து வருகிறது. வழக்கம் போல சக்தியையும் மற்றும் மல்லிகாவையும் காதம்பரியும் அவரது குடும்பத்தினரும் கொடுமை செய்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சக்தியின் கணவர் வருணுக்கு ஒரு மன நோய் இருக்கிறது. அவரது தாயார் தீ விபத்து ஒன்றில் இறந்ததை நேரில் பார்த்த வருணனுக்கு தீயை பார்த்தாலே பயம் ஏற்படும். அதற்காக அவர் பல நாட்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு இந்த நோய் குணமாகவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது அத்தை ஷீலா தான். அவர் வருணுக்கு உடல்நலம் சரியாக கூடாது என்பதற்காக மாத்திரைகளை மாற்றி மாற்றி கொடுத்து வந்துள்ளார். இதை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த சக்தி, வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் ஷீலாவின் அண்ணனும் வருணனின் அப்பாவுமான மனோகர் ஷீலாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஷீலா காதம்பரியின் குடும்பத்துடன் சேர்ந்து சதி திட்டங்களை தீட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று வருணனின் அம்மாவிற்கு நினைவு நாள் வருகிறது. அதற்காக அவர்கள் கடற்கரைக்குச் சென்று அவருக்கு திதி கொடுக்கின்றனர். அதே சமயம் இன்னொரு பக்கம் ஷீலா வருணனின் தாயை கடத்தி ஓர் அறையில் வைத்திருப்பது போன்ற ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் நிறைந்த தொடராக மௌனராகம் இருக்கிறது. இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television