ஷீலாவின் முகத்திரையை கிழித்த ஷக்தி.! வீட்டை விட்டு துரத்திய மனோகர்.! இன்றைய முழு எபிசோட் விவரம்

வெளியிட்டது

மௌனராகம் சீரியலில் வருணை காதம்பரியின் தந்தை விஸ்வநாதனிடமிருந்து காப்பாற்றி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் சக்தி. பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம். வீட்டிற்கு வந்த சக்தியிடம் உன் மொபைலில் இருந்து தான் எனக்கு வாய்ஸ் மெசேஜ் வந்தது என்று வருண் கூறுகிறார். ஆனால் தன்னுடைய மொபைலை எடுத்து வந்து வருணிடம் காட்டும் சக்தி, தான் அந்த மாதிரி மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறுகிறார். ஆனால் வருண் தன்னிடம் வந்த மெசேஜை சக்தியிடம் போட்டு காண்பிக்கிறார். அப்போது தான் ஸ்ருதியின் சூழ்ச்சி அவர்களுக்கு புரிகிறது. ஸ்ருதி தான் தன்னைப் போல பேசி உங்களை அந்த கோவிலுக்கு செல்ல வைத்துள்ளார். இதுதான் சுருதி மற்றும் விஸ்வநாதனின் பிளான் என்று வருணிடம் சக்தி கூறுகிறார்.

ஷீலாவின் முகத்திரையை கிழித்த ஷக்தி.! வீட்டை விட்டு துரத்திய மனோகர்.! இன்றைய முழு எபிசோட் விவரம் 1

இதனால் வருண் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். நாம் வீட்டில் தான் இருக்கிறோமா? அல்லது கொலைகார கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளோமா என்பதே தெரியவில்லை. நான் இப்பொழுதே போய் ஸ்ருதி இடம் இது குறித்து கேட்கிறேன் என்று ஆவேசமாக கூறுகிறார். ஆனால் அவரை சமாதானப்படுத்தும் சக்தி, பொறுமையாக இருங்கள் இப்போது கேட்க வேண்டாம். நேரம் வரும்போது நானே கேட்கிறேன் என்று கூறுகிறார். அந்த சமயத்தில் ஷீலாவும் ஸ்ருதியும் விஸ்வநாதனுக்கு போன் செய்து நடந்தது பற்றி கேட்கிறார்கள். அப்போது, அம்மாவை பார்க்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு போன சக்தி எப்படி அந்த கோவிலுக்கு வந்தார் என்று ஸ்ருதியிடம் விஸ்வநாதன் கேட்கிறார். ஆனால் ஸ்ருதிக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதனால் ஸ்ருதியும் ஷீலாவும் குழப்பத்திலேயே நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக வேலைக்கார பெண் வருகிறார். அவரிடம் ஷீலா சில கேள்விகளை கேட்கிறார்.

சக்தி எதற்காக உன்னிடம் நன்றி சொல்லிவிட்டு போனாள்? என்று ஷீலா கேட்க, அந்த வேலைக்கார பெண் சக்தியை தேடி கோவிலுக்கு சென்றுள்ள வருண் பற்றி நான்தான் சக்தியிடம் கூறினேன். அதனால்தான் அவர் தனக்கு நன்றி சொல்லிவிட்டு போகிறார் என்று வேலைக்கார பெண் கூறிவிட்டு சென்றார். அப்பொழுதுதான் சக்தியை அந்த கோவிலுக்கு அனுப்பியது வேலைக்கார பெண் என்பது அவர்களுக்கு புரிந்தது. பிறகு வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது சக்தி அனைவருக்கும் பாதாம் பால் போட்டு எடுத்து வருகிறார். பிறகு திடீரென இன்று நீங்கள் ஒரு வேலையை மறந்து விட்டீர்கள் என்று ஷீலாவிடம் பேச தொடங்குகிறார் சக்தி. அப்போது ஷீலா நான் அதை எல்லாம் மறக்கவில்லை. தூங்குவதற்கு முன்பாக நான் வருணுக்கு மாத்திரையை கொடுத்து விட்டு தான் தூங்குவேன் என்று பதில் அளிக்கிறார்.

அப்போது சக்தி மாத்திரையை என்னிடம் கொடுங்கள். இனிமேல் நானே கொடுக்கிறேன் என்று கேட்க, தர முடியாது என்று ஆவேசமாக பதில் அளிக்கிறார் ஷீலா. அப்போது மனோகர் மாத்திரையை சக்தியிடம் கொடுக்குமாறு கூறுகிறார். ஆனாலும் தான் மாத்திரை கொடுக்கப் போவதில்லை என்று விடாப்பிடியாக இருக்கிறார் ஷீலா. அப்போது ஷீலா இத்தனை நாள் மாத்திரையை மாற்றிக் கொடுக்கும் உண்மைகளை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார் சக்தி. இதனால் மனோகர் தருண் உட்பட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். ஸ்ருதி பயத்தில் நின்று கொண்டிருக்கிறார். வருண் இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு துக்கம் தாங்காமல் அழுது கொண்டிருக்கிறார்.

ஆனால் ஷீலா மனோகர் காலில் விழுந்து கதறி அழுகிறார். நான் அவ்வாறு செய்யவில்லை என்று நாடகம் ஆடுகிறார். அப்போது சக்தி, தருணிடம் நீங்கள் அந்த மருத்துவரிடமே போன் செய்து கேட்டுப்பாருங்கள் என்று சொல்ல, தருணும் போன் செய்கிறார். அதை ஸ்பீக்கரில் போடுமாறு சக்தி கூறுகிறார். ஸ்பீக்கரில் போட்ட பின்பு மருத்துவர் நடந்த உண்மைகள் அனைத்தையும் கூறுகிறார். தான் அந்த மாத்திரைகளை கொடுக்கவே இல்லை. சக்தி சொன்னபோது எனக்குமே ஆச்சரியமாக இருந்தது என்று மருத்துவர் உண்மைகளை போட்டு உடைக்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான மனோகர் ஷீலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறுகிறார். ஏன் இப்படி செய்தாய் என்றும் கேட்கிறார். ஆனால் அவர் நான் அவ்வாறு செய்யவில்லை என்பதை கூறி அழுகிறார். தருணிடமும் நான் அப்படி செய்யவில்லை என்று ஷீலா கூறுகிறார். ஆனால் தருண், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை, ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் என் அண்ணன் மீது எனக்கு பாசம் இருக்கிறது. அப்பா மன்னித்தாலும் நான் உங்களை மன்னிக்க மாட்டேன் என்று ஷீலாவிடம் கடுமையாக கூறுகிறார். பிறகு வருணிடம் செல்லும் ஷீலா நான் உனக்கு அப்படி செய்வேனா என்று கதறி அழுகிறார்.

நான் உங்களை என் அம்மா மாதிரி நினைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு இப்படி செய்து விட்டீர்களே என்று வரும் துக்கம் தாங்காமல் வருண் அழுகிறார். பின்னர் மனோகர் ஷீலாவிடம் நீயே வெளியே போகிறாயா இல்லை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என்று கோபமாக கூறுகிறார். பின்னர் தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஷீலா வீட்டை விட்டு வெளியேறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்