பார்த்திபன் அவார்ட் பைத்தியம்.! கெளதம் வாய்ஸ் ஓவர் பைத்தியம்.. வச்சி செய்த ப்ளூ சட்டை

நேற்று தமிழகம் எங்கும் வெளியாகி இருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ளது இந்த படம். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ரெட்ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளில் வெளியீட்டு உரிமையை பெற்றிருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏஆர் ரகுமான் கூட்டணி அமைந்ததால் வெந்து தணிந்தது காடு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் கிராமத்தில் ஒரு எளிய இளைஞனாக இருக்கும் ஒருவர் மும்பைக்குச் சென்று எப்படி டானாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. கீழே உள்ள வீடியோவை பாரக்கவும்.

பார்த்திபன் அவார்ட் பைத்தியம்.! கெளதம் வாய்ஸ் ஓவர் பைத்தியம்.. வச்சி செய்த ப்ளூ சட்டை 1

விளம்பரம்

திருநெல்வேலியில் ஒரு முள் காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் முத்து (சிம்பு) என்பவர் அங்கு ஏற்படும் ஒரு தீ விபத்தால் வேறு வேலைக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் மும்பைக்கு சென்று ஒரு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். அங்கு சென்று பார்த்த போது தான் தெரிகிறது அவர்கள் எல்லாருமே ஒரு ரவுடி கும்பல் என்று. பின்பு சிம்பு எப்படி கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பது பற்றிய படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பதால் பலருக்கும் இது சுமையாக அமைந்தது. முதல் பாதி மிக மெதுவாக சென்றது, இரண்டாவது பாதியில் தான் விறுவிறுப்பு கூடியது மேலும் இது இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்பதால் கிளைமேக்ஸ் ஏதோ முடிக்க வேண்டும் என்பதற்காக முடித்தது போல் இருந்த்தாக பலரும் கருத்து கூறினர். தற்போது இந்த படம் குறித்த விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  தோழியுடன் செம்ம கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை மீனா..!

பார்த்திபன் அவார்ட் பைத்தியம்.! கெளதம் வாய்ஸ் ஓவர் பைத்தியம்.. வச்சி செய்த ப்ளூ சட்டை 3

விளம்பரம்

அவர் கூறும் பொழுது மைய கதாபாத்திரமான ஹீரோவிற்கு ஏதாவது நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் ஒரு நோக்கம் கூட இல்லாமல் ஹீரோவும், கதையும் நகர்கிறது. பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம், அதுபோல கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்திய.ம் அவர் இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் சொல்லாமல் இருக்கிறார் என்று பார்த்தால், வேறு ஒருவரை வைத்து வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார். இதிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இந்த பைத்தியம் தெளியவில்லை என்பது தெரிகிறது. மேலும் ஹீரோவுடன், பத்து ஜிம் பாடிகளை மும்பை நகர வீதிகளில் அலையவிட்டால் அது கேங்ஸ்டர் படமாகி விடுமா? நானும் கேங்க்ஸடர் படம் எடுக்கிறேன் என்று சொல்லி ஒரு அழுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளனர் என்று கடுமையான விமர்சனத்தை கூறியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment