அதிதி போலவே மதுர வீரன் பாடலுக்கு ஆடிய மன்சூர் அலிகான்.. செம்ம காமெடியா இருக்கே..!

சமூக காலமாக டிவிகளில் வைரலாகி வரும் ஒரு நபர் தான் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் மிகப்பெரிய வில்லனாக 90ஸ் கிட்ஸ்களுக்கு அறிமுகம் ஆனவர். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். விஜயகாந்தும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்தின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்து இருப்பார். விஜயகாந்த் உடல்நலம் குன்றிய சமயத்தில் ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவரை பார்த்தபடியே அருகிலேயே அமர்ந்து கண்கலங்கியபடி இருந்தார் மன்சூர் அலிகான். வெளியில் கெத்தாக இருந்தாலும் குழந்தை மனசாக இருப்பார். காமெடியாக பல விசயங்கள் செய்து கொண்டிருப்பார். இதை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜே ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார். அவரின் யதார்த்தமான ஆட்டிட்யூட் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிதி போலவே மதுர வீரன் பாடலுக்கு ஆடிய மன்சூர் அலிகான்.. செம்ம காமெடியா இருக்கே..! 1

விளம்பரம்

அவர் பேசும் போது, மன்சூர் அலிகானின் நேர்காணல் பார்த்துக் கொண்டிருந்தபோது நிரூபர் சீரியஸாக கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார் ஆனால் மன்சூர் ஒரு இலையை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருப்பார். அவருக்கு கைதி படத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணியிருந்தேன். அவரை வேறு படத்தில் கொண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அவரது மகனை ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு மகனையே கலாய்த்து தள்ளினார். இதெல்லாம் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைந்துள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு பாடலுக்கு யூடியூப் ஆங்கர்களுடன் சேர்ந்து ஆடினார். அந்த வீடியோவும் வைரலானது. இவ்வாறு சமீப காலமாக வைரல் மன்னனாக வலம் வருகிறார் மன்சூர் அலிகான்.

தொடர்புடையவை  அடப்பாவி அனிருத், இத கூடவா ஆட்டைய போட்டு இருக்க? விக்ரம் படத்தின் BGMஐ சுட்ட அனிருத்

அதிதி போலவே மதுர வீரன் பாடலுக்கு ஆடிய மன்சூர் அலிகான்.. செம்ம காமெடியா இருக்கே..! 3

விளம்பரம்

இந்த நிலையில் மன்சூர் அலிகான், ராஜூ வூட்ல பார்ட்டி என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவிற்கு வந்திருக்கிறார். அவர் அங்கு பிரியங்காவுடன் ரொமான்ஸ் ஆக டான்ஸ் ஆடுவது, ராமரை அடிப்பது என்று பல கலாட்டாக்களை செய்துள்ளார். அப்போது அவர் சமீபத்தில் விருமன் படத்தில் அதிதி போல் மதுரவீரன் அழகுல பாட்டுக்கு திடீரென பிரியங்கா உடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment