சக்தியை பார்த்து கதறி அழும் வருண்.! அப்பாடா வருணுக்கு சக்தியை ஞாபகம் இருக்கு.! வேற லெவல்

மௌன ராகம் தொடரில் தற்போது வருணுக்கு இருந்த மன அழுத்தத்தை சக்தி போக்கி இருந்தார். இதனால் வருண் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியிருந்தார். வருணுக்கு அவரது தாயார் நினைவை கொண்டு வருவதற்காக சக்தி பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் வருண் சக்தியை மறந்து விடுவார் என்று அனைவரும் எண்ணி இருந்த நிலையில்,அவர் சக்தியை மறக்காமல் இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் மௌன ராகம். இந்தத் தொடரில் கதாநாயகனாக வருண் கதாபாத்திரத்தில் சல்மானும், கதாநாயகியாக சக்தி கதாபாத்திரத்தில் ரவீனாவும் நடித்து வருகின்றனர். இதில் வருணுக்கு தன் தாயார் தீவிபத்தில் இறந்து விட்டதாக நினைத்து நினைத்து அதனால் அவருக்கு மன அழுத்தம் இருக்கிறது. அவர் நெருப்பை பார்த்தாலே பயந்து அலறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தியை பார்த்து கதறி அழும் வருண்.! அப்பாடா வருணுக்கு சக்தியை ஞாபகம் இருக்கு.! வேற லெவல் 1

விளம்பரம்

ஒரு கட்டத்தில் வருணுக்கு இந்த நோய் தீவிரமடைய இந்த பயத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்று அவரது மனைவி சக்தி தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொள்ள முடிவெடுத்திருந்தார். இதனால் கோவிலில் வைத்து தனக்குத்தானே நெருப்பை மூட்டி அதற்கு நடுவிலே நின்றார் சக்தி. அதை பார்த்த வருணுனுக்கு 15 வருடங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு நடந்தது நினைவுக்கு வருகிறது. சக்தியை அவர் காப்பாற்றி விடுகிறார். மேலும் தனது தாயார் தீ விபத்தில் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்பதும் அவருக்கு தெரிய வருகிறது. மேலும் அவருக்கு நெருப்பை பற்றிய பயமும் போய்விடுகிறது. 15 வருடங்களுக்கு முன்பு இறந்த தன் தாய் திரும்பி வந்ததை நினைத்து அவர் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் சக்தியை அவர் மறந்து விடுவார் என்று பலரும் எண்ணியிருந்தனர்.

தொடர்புடையவை  CWC-ல் நடக்கவுள்ள முதல் எலிமினேஷன்..இந்த வாரம் வெளியேற போவது யார்? | Cook With Comali Season 3

சக்தியை பார்த்து கதறி அழும் வருண்.! அப்பாடா வருணுக்கு சக்தியை ஞாபகம் இருக்கு.! வேற லெவல் 3

விளம்பரம்

ஆனால் அவர் சக்தியை மறக்கவில்லை. மேலும் தருண் வருணிடம் சக்தி பற்றி கூறுகிறார். சக்திதான் முயற்சி செய்து உன்னை இந்த மன நோயிலிருந்து காப்பாற்றினார். அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு இந்த செயலை செய்தார் என்று கூற, சக்தி மீது வருணுக்கு மிகுந்த காதல் வருகிறது. மேலும் எனக்கு ஒன்று என்றால் நீ என்ன வேணாலும் செய்வாயா என்று கண்ணீருடன் வருண் சக்தியை கட்டிப்பிடித்து அழுகிறார். மகிழ்ச்சியான அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment