வாரிசு படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரை உலகின் டாப் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சென்னையில் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதுவரை எந்த ஆடியோ லான்ச்சும் இதுபோல் பிரம்மாண்டமாக நடைபெறாத வகையில் வாரிசு ஆடியோ லான்ச் நடைபெற்றது. சுமார் லட்சக்கணக்கான ரசிகர்கள் விஜயை பார்க்க குவிந்தனர். அங்கு வந்த விஜய் வழக்கம் போல் குட்டி ஸ்டோரி கூறினார். பின்னர் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார். ஜனவரி ஒன்றாம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி முழுவதுமாக ஒளிபரப்பப்பட்டது. தளபதி விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாடி ஆடியிருந்தார். பின்னர் ரஷ்மிகா மந்தனா ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்று வாரிசு படத்தின் ரன்னிங் டைம் மற்றும் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருந்தது.

வாரிசு படத்திற்கு U சான்றிதழும் படம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் வாரிசு படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கிறார்கள். இப்போது இருந்தே #VarisuTrailer என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆக தொடங்கியுள்ளது.
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023