மௌனராகம் சீரியல் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மானும் அவரது தம்பியின் மனைவியாக ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷில்பாவும் இணைந்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மாலை டம் டம் பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடர் என்றால் அது மௌன ராகம் தான். இந்த தொடருக்கு இத்தனை ரசிகர்கள் இருக்க காரணம் சில சீரியல்கள் போல் ஒரே ட்விஸ்ட்டை ஐந்து ஆண்டுகளாக ஓட்டிக்கொண்டு இல்லாமல், ஏதேனும் ஒரு ட்விஸ்ட் நடந்தால் அதை உடனடியாக உடைத்து விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி கதை நகர்ந்து விடும். அதனாலேயே இந்த தொடருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடரில் பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. இத்தனை வருடங்களாக காணாமல் போயிருந்த வருணின் தாயார் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி காலம் காலமாக பராமரித்து வரும் கோவில் நகைகளை சக்தியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளும் படி வருண் அம்மா மூத்த மருமகள் சக்திக்கு கட்டளை இடுகிறார். மூத்த மகள் விரதம் இருந்து அந்த நகைகளை பாதுகாப்பாக கோவிலில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் வழக்கம் போல ஸ்ருதி அந்த நகைகளை திருடி விட்டார். இதனால் கதையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் வந்து நகைகளை கேட்கின்றனர். அதற்க்கு வருண் மூன்று நாட்களில் உங்கள் நகைகளை திரும்பி உங்களிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவேன் என்று சபதம் ஏற்கிறார். இதனால் ஸ்ருதியை வருண் கையும் களவுமாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மான். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷில்பா.
இந்த தொடரில் நடிக்கும் சக்தி, வருண், தருண், ஸ்ருதி ஆகிய அனைவரும் இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பவர்கள். அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது வருண் மற்றும் ஸ்ருதி இருவரும் இணைந்து சதற்போது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள மாலை டம் டம் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. மேலும் வருணிடம், அது உங்கள் தம்பி மனைவி அவருடன் சேர்ந்து நடனம் ஆடுகிறீர்களே? சக்தியுடன் சேர்ந்து ஆடுங்கள் என்று காமெடியாக கலாய்த்து கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O