காஷ்மீரில் உள்ள சிவ லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து மஹா சிவராத்திரி கொண்டாடிய திரிஷா.!

நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகை திரிஷா காஷ்மீரில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட வீடியோவை தற்போது அவரே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்கிற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 66 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் திரிஷா. 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து கில்லி என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்தார். மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய் உடன் இணைந்து தற்போது 67வது படமான லியோ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள சிவ லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து மஹா சிவராத்திரி கொண்டாடிய திரிஷா.! 1
தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்குமே இது 67வது திரைப்படம் ஆகும் எனவே இது ஸ்பெஷல் திரைப்படமாக இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் ராம் என்கிற படத்திலும், தமிழில் பொன்னியின் செல்வன் பாகம் 2, சதுரங்க வேட்டை பாகம் 2, தி ரோட் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் குந்தவை நாச்சியாராக நடித்து பல உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார் திரிஷா. அடுத்ததாக ராங்கி என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. தற்போது காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங்கில் படு பிஸியாக இருந்து வருகிறார் திரிஷா. அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காஷ்மீரில் இருந்து பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் கூட காதலர் தினத்தில் படத்தில் பணியாற்றும் பெண்கள் தனக்கு பூங்கொத்து கொடுத்து இருந்ததை அவர் பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு.!

காஷ்மீரில் உள்ள சிவ லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து மஹா சிவராத்திரி கொண்டாடிய திரிஷா.! 3
இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. திரிஷா காஷ்மீரில் இருப்பதால் அங்கு மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த சிவலிங்கத்தை பால் அபிஷேகம் செய்து அவர் வழிபட்டிருக்கும் காணொளியை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment