Categories: சினிமா

“30 வருட காதல் பயணம்” 30வது திருமணநாளை கொண்டாடும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.! வாழ்த்திய மகள்.!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இன்று தனது மனைவியுடன் இணைந்து முப்பதாவது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.

"30 வருட காதல் பயணம்" 30வது திருமணநாளை கொண்டாடும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.! வாழ்த்திய மகள்.! 1

அந்த புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் எம்எஸ் பாஸ்கருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இயக்குனர் விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர் எம் எஸ் பாஸ்கர். ஆனால் இவருக்கு திருப்புமுனையை கொடுத்த ஒரு நிகழ்ச்சி உண்டு என்றால், அது சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தான்.


இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடியனாகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் நல்ல குரல் வளம் இருப்பதால் பல படங்களில் பின்னணி பேசுபவராகவும் பணியாற்றி வருகிறார்.


குறிப்பாக ஆங்கில படங்களான ஜுராசிக் பார்க், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பாண்டியராஜுடன் இணைந்து இவர் செய்த காமெடி காலத்திற்கும் அழியாத புகழ் கொண்டது.


அதேபோல 2006 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் நடித்ததன் மூலமாக பலரின் மனங்களை வென்றார். இந்த திரைப்படத்திற்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் வென்றிருக்கிறார்.


காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் கலைஞர் என திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரது மகன் ஆதித்யாவும் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எம்.எஸ். பாஸ்கருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆதித்யா, ஐஸ்வர்யா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று தனது தாய் தந்தையரின் புகைப்படத்தை பகிர்ந்து முப்பதாவது திருமண வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்