சமீபத்தில் திருமணம் முடித்த ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி விரைவில் பெற்றோர்கள் ஆக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆதியை பொறுத்துவரை மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தமிழில் முதன்முதலாக மிருகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். பஅரவாண் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் ஈரம், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தார். இந்த இரு படங்களிலும் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிக்கி கல்ராணி. மரகத நாணயம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும் நிக்கி கல்ராணிக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இருவரும் இதைப்பற்றி பொது வெளியில் பேசவில்லை.

கடந்த மார்ச் மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் நிச்சயதார்த்திற்கு யாரையும் அழைக்கவில்லை. புகைப்படங்களை மட்டுமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த மே 19ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதற்கு முன்பாக அவர்கள் ஹால்தி நிகழ்வு எனப்படும் நலங்கு வைக்கும் நிகழ்வு நடத்தினர் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது நிக்கி கல்ராணியும் ஆதியும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் குறித்து ஆதியும் நிக்கி கல்ராணியும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை இருவரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Tamil Mithran