Categories: சினிமா

பாத் டப்பில் இயற்கை பிரசவம்..தம்பியை கொஞ்சும் அகிரா..மகனுடன் விளையாடும் வீடியோவை முதல் முறையாக பகிர்ந்த நகுல்

வெளியிட்டது

தமிழில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நகுல். நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் பாடியும் உள்ளார். ஆரம்பத்தில் உடல் பருமனாக காணப்பட்ட இவர் பின்னர் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் தனது தோழியான ஸ்ருதியை மணந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாத் டப்பில் இயற்கை பிரசவம்..தம்பியை கொஞ்சும் அகிரா..மகனுடன் விளையாடும் வீடியோவை முதல் முறையாக பகிர்ந்த நகுல் 1

2020ம் ஆண்டில் இவர்களுக்கு அகிரா என்ற மகள் பிறந்தார். அகிரா செய்யும் குறும்பு வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்கள். இணையத்தைக் கலக்கும் ஜோடிகளில் ஒருவராக நகுல்- ஸ்ருதி ஜோடிகள் உள்ளனர். ஸ்ருதி சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே தனது முதல் குழந்தையை பாத் டப்பில் பிரசவித்தது போலவே தனது இரண்டாவது குழந்தையையும் பிரசவித்துள்ளார் ஸ்ருதி. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பாத் டப்பில் குழந்தை பிரசவம் செய்யும் முறையை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் பிரவசம் பார்க்கும் முறையே சரியானது இது போல் தவறான முன்னுதாரணங்களை செய்யாதீர்கள் என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நகுல் ஸ்ருதி அதே முறையில் குழந்தை பெற்றுள்ளனர். அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். அதை நீங்களும் காண… Watch the below video..

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்