ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற தொடரில் நடித்த நடிகை நட்சத்திராவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த செய்தியை அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த நட்சத்திரா பின்னர் படங்கள் கை கொடுக்காததால் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற தொடரில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார் நட்சத்திரா. தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்கிற சீரியலிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அவருடைய காதலர் விஸ்வநாத் என்பவருக்கும் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

நண்பர்கள் யாரையும் அழைக்காமல் உறவினர்களை மட்டும் வைத்து எளிய முறையில் திருமணம் செய்து கொண்டிருந்தார் நட்சத்திரா. இதை அவரது தோழி ஸ்ரீநிதி அப்போது கடுமையாக விமர்சித்து இருந்தார். நட்சத்திராவின் நெருங்கிய தோழியாக இருந்த அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அவர் நட்சத்திராவை விமர்சித்து வந்தார். தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து நட்சத்திராவெம் ஸ்ரீநிதியும் மீண்டும் நண்பர்களாக இணைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நட்சத்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
அவருக்கு வீட்டிலேயே வைத்து எளிமையான முறையில் வளைகாப்பும் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நட்சத்திரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நட்சத்திராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக அறிவித்திருக்கிறார்.
தனது மகள் தன்னுடைய கையையும் தன்னுடைய கணவரின் கையையும் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த அவர், “உங்கள் வயிற்றில் பல மாதங்களாக உதைத்துக் கொண்டிருந்த ஒருவரை நீங்கள் இறுதியாக காணும் பொழுது” எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிவித்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை போட்டு வருகின்றனர். மேலும் நட்சத்திராவின் தோழியாக இருக்கும் ஸ்ரீநிதியும் குழந்தையின் காலை பிடித்துக்கொண்டு “தங்கத்தாமரை மகளே” என்று பகிர்ந்திருக்கிறார். நட்சத்திரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.