Categories: சினிமா

தனது இரு மகன்களை முதல் முறையாக காட்டிய நமிதா.! அழகா இருக்காங்களே ரெண்டு பேரும்

வெளியிட்டது

திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை முதல்முறையாக வீடியோவில் காட்டியுள்ளார் நமீதா. தென்னிந்திய தமிழ் சினிமாவில் மிக கிளாமராக நடித்து புகழ் பெற்றவர் நடிகை நமீதா. சில நடிகைகள் மட்டுமே கிளாமர் காட்டி படத்தில் நடிக்க முன் வருவார்கள். பின்னாளில் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் 2000களில் தொடங்கி இன்று வரை திரைத்துறையில் இருக்கும் ஒரு கிளாமர் நடிகை என்றால் அது நமிதா தான். 2004ம் ஆண்டு எங்கள் அண்ணா என்ற படத்தில் அறிமுகமான இவர், அஜித், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் இவர் மகா நடிகன், ஏய், இங்கிலீஷ் காரன், ஆனை, பட்ச குதிரை நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தனது இரு மகன்களை முதல் முறையாக காட்டிய நமிதா.! அழகா இருக்காங்களே ரெண்டு பேரும் 1

இவர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பல படங்கள் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு கிடைத்த புகழைக் கொண்டு இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இதில், அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் மக்களின் செல்வாக்கு அவ்வளவாக இல்லாத காரணத்தினாலும், மொழி புரியாமல் சண்டை போட்டதாலும் அவரை பாதியிலேயே மக்கள் வெளியேற்றினர். பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வருகிறார் நமீதா. இவருக்கு கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ப்ரொடியூசர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமிதா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரண்டுமே ஆண் பிள்ளைகள். தற்போது இருவரின் முகத்தை முதல் முறையாக காட்டி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்