உங்க ஆன்டி இந்தியன் அளவுக்கு அண்ணாச்சி படம் கேவலமா இருக்காது..ப்ளூ சட்டையை கேவலப்படுத்திய தியேட்டர் ஓனர்

உங்கள் ஆன்ட்டி இந்தியன் படத்தைப் பார்க்க 17 பேர் மட்டுமே வந்ததாக ப்ளூ சட்டை மாறனை தியேட்டர் உரிமையாளர் ஒருவர் திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படம் வெளியாகும் போது பலர் அந்த படத்தை பலரும் விமர்சனம் செய்வது வழக்கம். அதுவும் யூடியூப், இணையம் பெருகிவிட்ட இந்த காலத்தில் பலரும் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட நபர் ப்ளூ சட்டை மாறன். தன்னை தானே திரை விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு திரைப்படங்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தின் நிறைகளை பேசுவதை விட்டு விட்டு குறைகளை மட்டுமே பேசிவருவதால் இவரை நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

விளம்பரம்

முண்ணனி நடிகர்களின் படங்களையும், இயக்குனர்களையும், தனிப்பட்ட முறையில் கூட தாக்குதல் செய்து பேசினார் ப்ளூ சட்டை. வலிமை படம் வெளியான போது அஜீத்தை பார்த்து டான்ஸ் ஆட சொன்னால் பரோட்டா மாவு பிசைகிறார் என்று கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தார் மாறன். இதனால் அவர்களின் ரசிகர்கள் கடுப்பாகினர். கமெண்டுகளில் சென்று அவரை அசிங்க அசிங்கமாக திட்டினர். இதற்கெல்லாம் முன்பாக விமர்சனம் செய்யும் தன்னாலும் ஒரு நல்ல படம் எடுக்க முடியிம் எனக்காட்டிக் கொள்ள ஆன்டி இந்தியன் என்ற ஒரு படத்தை எடுத்தார் ப்ளூ சட்டை. இந்த படம் சரியாக ஓடவில்லை. இதில் அவரே நடித்து இருந்தார். வந்த வேகத்திலேயே காணாமல் போய் தோல்வியை தழுவியது அந்த படம். தற்போது மீண்டும் ஒரு போஸ்ட்டைப் போட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ப்ளூ சட்டை.

விளம்பரம்

அதாவது அண்ணாத்த, வலிமை படங்களின் ட்ரைலர் பார்வையாளர்களை விட லெஜண்டர் சரவணா படத்தின் ட்ரைலருக்கு பார்வையாளர்கள் அதிகம் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரஜினி, அஜீத் ரசிகர்கள் மீண்டும் ப்ளூ சட்டையை கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு தியேட்டர் உரிமையாளர் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் உங்கள் ஆன்டி இந்தியன் படம் எங்க தியேட்டரில் 2 ஷோதான் ஓடுச்சு.. 2 ஷோவையும் சேர்த்து மொத்தம் 17 பேர்தான் பார்த்தனர். பின்னர் 3வது ஷோவே வேறு படத்தை மாற்றி விட்டோம். அண்ணாச்சி படம் உங்கள் படம் மாதிரி இருக்காது என்று நம்புகிறோம் என்று ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் உனக்கு இந்த அவமானம் தேவையா என்று கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடையவை  "வெறித்தனமாக ரெடியாகும் PS-1 முதல் படம்"!! செதுக்கிவரும் ARR"!!

உங்க ஆன்டி இந்தியன் அளவுக்கு அண்ணாச்சி படம் கேவலமா இருக்காது..ப்ளூ சட்டையை கேவலப்படுத்திய தியேட்டர் ஓனர் 1

விளம்பரம்

ஆன்டி இந்தியன் மாதிரி குப்பை படத்தை எடுத்துவிட்டு நீங்கள் மற்ற படங்களை குப்பை என சொல்கிறீர்களே? உங்களுக்கெல்லாம் மற்ற படங்களைப் பற்றி பேச அருகதையே கிடையாது என ப்ளூ சட்டையை வறுத்து எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment