நடிகராக சினிமா துறையில் நுழையும் பலராலும் தொடர்ந்து அந்த துறையில் வெற்றிகரமான நடிகராக இருந்து விட முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. பின்னர் சிலர் துணை கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். சிலர் வெவ்வேறு தொழில்களுக்கு சென்று விடுவார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1991ஆம் வெளியான பாரதிராஜாவின் “புது நெல்லு புது நாத்து” எனும் படம் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு வில்லன் நடிகராக நடித்திருந்தார். பின்னர் ரஜினியுடன் இவர் நடித்த “எஜமான்” படம் மிக பெரிய வெற்றியையும், தமிழ மக்களிடம் இவருக்கு மிக பெரிய அறிமுகத்தையும் கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றி இவர் வில்லனாகவே தமிழ், தெலுங்கு மட்டும் மலையாள மொழி படங்களில் நடிக்க துவங்கி மாபெரும் வெற்றியை கண்டார். மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் ‘தேவாசுரன்” என்ற 1993ஆம் ஆண்டு படத்தில் நடித்ததற்கு கேரளாவில் மிக பெரிய வரவேற்பையும், விருதுகளையும் வாங்கி குவித்தார்.
இவரை திரைத்துறையில் வில்லனாக அறிமுகப்படுத்திய பாரதிராஜாவே இவரை “கிழக்கு சீமையிலே” படத்தில் வில்லனிசம் கலந்த ஹீரோவாக அறிமுகம் செய்தார். இருப்பினும் இவர் இயக்குனர் பிரதாப் போத்தனின் ‘சீவலப்பேரி பாண்டி” படம் தான் ஒரு முழு நீள நாயகனாக மக்கள் ஏற்பட்டு கொண்டதற்கு வகை செய்தது. அந்த படம் மாபெரும் வெற்றியை கண்டதோடு தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்க வழிவகுத்தது. பின்னர் நடித்த “எட்டுப்பட்டி ராசா” படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதையும் இவர் பெற்றார்.
பின்னர் சில படங்கள் நடித்தாலும் எதுவும் பெரிதாக வெற்றி பெறாததால், அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவ்வப்போது வாய்ப்புகள் வரும் போது இங்கு வந்து படங்கள் நடித்து விட்டு செல்கிறார். மற்றப்படி முழுவதுமாக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவர் ஒரு முறை 2001ஆம் ஆண்டு தி.மு.கவின் சார்பாக வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும், பின் 2009ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் Social Justice and Empowerment துறையில் மந்திரியாகவும் அப்போது இருந்தார்.
அரசியலிலும் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கிக் கொண்டார் தற்பொழுது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார் அங்கு விவசாயம் மற்றும் ஒரு கம்பெனியை நெப்போலியன் சிறப்பாக நடத்தி வெற்றிகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் சொந்தமாக நிலம் வாங்கிய நடிகர் நெப்போலியன் விவசாயம் செய்து உள்ளார். நிலத்துக்கு அருகே நின்று எம்ஜிஆர் பாடிய விவசாயி விவசாயி பாடலை பாடி அசத்தினார் நெப்போலியன் அதன் வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது
Video Courtesy – GalattaTamil