புதிய தொழில் தொடங்கிய சின்னத்திரை ஜோடிகள் நவீன் கண்மணி .! குவியும் வாழ்த்துக்கள்.!

வெளியிட்டது

இதயத்தை திருடாதே என்கிற சீரியலின் மூலமாக பிரபலமான நடிகர் நவீன் குமாரும் அவரது மனைவி செய்திவாசிப்பாளர்கள் கண்மணியும் இணைந்து தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். அந்த வீடியோவை அவர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நவீன் குமார். இவர் பின்னர் சீரியலில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரைக்கு வந்தார். முதல் தொடரே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவருடன் நடித்த ஹீமா பிந்துவை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணி உடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணியும் நவீனும் குடும்ப நண்பர்கள் என்பதால் இருவர் வீட்டு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்கிய சின்னத்திரை ஜோடிகள் நவீன் கண்மணி .! குவியும் வாழ்த்துக்கள்.! 1

சென்னையில் வைத்து நடைபெற்ற இவர்களின் திருமண மற்றும் வரவேற்பிற்கு நடிகர்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக இருவரும் இணைந்து அறிவித்திருந்தனர். சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களிடம் இந்த விஷயத்தை கூறலாம் என்று இருவரும் எண்ணி இருந்த நிலையில் வீடியோ ஒன்றில் கண்மணியின் வயது பெரிதாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப தொடங்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் இதை ரகசியமாக வைக்க முடியாத நவீனும் கண்மணியும் இந்த விஷயத்தை வீடியோவாக வெளியிட்டு விளக்கம் அளித்தனர். மறைக்க வேண்டும் என்று நாங்கள் இவ்வாறு செய்யவில்லை சர்ப்ரைஸாக உங்கள் அனைவரிடமும் சொல்லலாம் என்று இருந்தோம், ஆனால் அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள், மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்தது போல் ஆகிவிட்டது, வயிறு பெரிதாக இருக்கும் வீடியோவை போஸ்ட் செய்து நாங்களே மாட்டிக்கொண்டோம் என்று பேசி இருந்தனர்.


இந்த நிலையில் நவீன் மற்றும் கண்மணி இருவரும் இணைந்து காபி மற்றும் டீ ஷாப் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். தங்கள் வாழ்க்கையில் முதன் முதலில் ஆரம்பித்த தொழில் இதுதான் என்றும், இரண்டு ஆண்டுகளாக பெயரை மட்டும் யோசித்து வைத்துவிட்டு சுற்றிக் கொண்டு இருந்ததாகவும், தற்போது இந்த கனவு நிறைவேறி இருப்பதாகவும் நவீன் பேசினார். பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் இந்த கடை திறந்து இருப்பதாகவும் அதற்கு ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துக்கள் வேண்டுமென்று வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். தாங்கள் தொடங்கி இருக்கும் புதிய கடைக்கு “கொட்ட காப்பி” என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Navin Kanmani

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்