மிகவும் எதிர்பார்த்த தருணம்..! காவ்யா கழுத்தில் தாலி கட்டிய பார்த்தி.! கண்கலங்கிய காவியா.!

ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவியா கழுத்தில் பார்த்தி தாலி கட்டி இருக்கிறார். அந்த அழகிய வீடியோவை ப்ரோமோவாக சீரியல் குழு வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடராக ஈரமான ரோஜாவே தொடர் இருந்து வருகிறது. சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த்தும், காவியா கதாபாத்திரத்தில் நடிகை கேபியும், ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் திரவியமும், பிரியா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வாதியும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் ஜீவாவும் காவியாவும் காதலித்து வருகின்றனர். பார்த்திபனுக்கும் பிரியாவிற்கும் திருமணம் நிச்சயம் நடக்கிறது. திருமணத்தன்று நடந்த குடும்பத்தால் பார்த்திபன் தம்பியின் காதலியன காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த தருணம்..! காவ்யா கழுத்தில் தாலி கட்டிய பார்த்தி.! கண்கலங்கிய காவியா.! 1
இதனால் வேறு வழியில்லாமல் தம்பி ஜீவா அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குழப்பங்கள் நீடிக்கிறது. இரண்டு பேருமே தங்கள் விரும்பிய வாழ்க்கை வாழாமல் குழப்பத்துடனே வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கதையின் வில்லியாக பார்த்திபனின் அத்தை தேவி இருக்கிறார். இவர் பார்த்திபனுக்கு தனது மகள் ரம்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடத்தி வருகிறார். இதனால் பார்த்திபன் திருமணம் செய்து கொண்ட காவியாவை அவரிடமிருந்து விவாகரத்து பெற வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தேவியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் பார்த்திபன் குடும்பம் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றுகின்றனர். மேலும் காவியாவை மீண்டும் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதலில் நடந்த திருமணம் அவசர கதியில் குழப்பமான முடிவில் எடுக்கப்பட்டதால் தற்போது மீண்டும் பார்த்தி-காவியா திருமணத்தை நடத்தி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் சீரியலில் களம் இறங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! புது கெட்டப்புடன் வெளியான வீடியோ.!

மிகவும் எதிர்பார்த்த தருணம்..! காவ்யா கழுத்தில் தாலி கட்டிய பார்த்தி.! கண்கலங்கிய காவியா.! 3

இந்த நிலையில் மீண்டும் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதற்கிடையே ரம்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி பார்த்திபன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால் அந்த தடைகள் அனைத்தும் இங்கே தற்போது பார்த்திபன் காவியா திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த அழகிய வீடியோவை ப்ரோவாக தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment