நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். தற்போது அந்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த தகவலை விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாராவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகை கலக்கி வரும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவர் தனது கணவர் தயாரிப்பில் கடைசியாக கனெக்ட் என்கிற பேய் படத்தில் நடித்து முடித்து இருந்தார். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நயன்தாராவின் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறைவன் என்கிற ஒரு தமிழ் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், லிவ்விங் டுகெதர் வாழ்க்கையிலும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரம் தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்கள் இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண முடிந்த நான்கே மாதத்தில் அவர்கள் தங்களுக்கு இரட்டை குழந்தைகள். பிறந்ததாக அறிவித்திருந்தனர். இது பயங்கர சர்ச்சையை எழுப்பி இருந்த நிலையில் பின்னர் இருவரும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரியவந்தது. அதிலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன பின்னர் தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்கிற சர்ச்சை எழுந்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டிருந்த விஷயமும் வெளியில் தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது தனது இரண்டு மகன்கள் உடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.
பிள்ளைகளுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் மேக்கப் கூட போடுவதை நிறுத்தி இருப்பதாக விக்னேஷ் சிவனே ஒரு உருக்கமான பதிவில் தெரிவித்து இருந்தார். அந்த அளவிற்கு தனது குழந்தைகள் மீது உயிரை வைத்திருக்கும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகளின் முகத்தை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட மும்பை விமான நிலையத்திற்கு மகன்களுடன் வந்த அவர், பிள்ளைகளின் முகத்தை காட்டாமல் மறைத்து கொண்டு சென்றார். இந்த நிலையில் தற்போது தனது இரண்டு மகன்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார் நயன்தாரா. அதில் உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நயன்தாரா. இதில் N என்பது நயன்தாராவை குறிக்கும் வகையிலும் சிவன் என்பது அவரது தந்தையை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களுடைய குழந்தைகள்தான் தங்களுக்கு உயிர் மற்றும் உலகம் என்று அடிக்கடி பதிவில் கூறிவரும் அவர்கள் பெயரிலும் அதேபோல் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.