தமிழின் முண்ணனி நாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் ஒரு சிறிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். திரைக்கு வந்து 20 ஆண்டுகளில் 75 படங்கள் நடித்து முடித்துள்ளார். தமிழின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இவர் இருக்கிறார். நயன்தாராவின் 75வது படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியிருந்தது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்க உள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் சென்னையில் மகாபலிபுரத்தில் ஒரு மிகப்பெரிய தனியார் ரிசார்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. உடைக்கட்டுப்பாடு, செல்போன் கொண்டு வரக்கூடாது, போட்டோக்கள் எடுக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னணியில் அவர்கள் தங்களது திருமண வீடியோவை ஒரு தனியார் ஓடிடி நிறுவனத்திற்கு விற்க இருப்பதாகவும் போட்டோக்கள் வெளியானால் அந்த ஓடிடி நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்காது என்பதால் இவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். தாலி கட்டுவது பின்னர் மாலை மாற்றுவது என்று ஒரு சில புகைப்படங்களை மட்டுமே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஒரு புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை.
இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர் இந்த நிலையில் ஓடிடி தளம் 25 கோடி விலைக்கு நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணத்தை வாங்கவில்லை என்ற தகவல் பரவியது. விலை அதிகம் என்று ஓடிடி தளம் பின்வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஓடிடி தளம் வெளியிடுவதற்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு விட்டார். இதனால் அந்த ஓடிடி தளம் ஏமாற்றத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் திருமண வீடியோவை வெளியிடுவதில்லை என்ற முடிவுக்கு அந்த ஓடிடி தளம் வந்து விட்டதாகவும், இதனால் தனது இன்ஸ்டாகிராமிலேயே புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட விக்னேஷ் நயன்தாரா தம்பதிகள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.