வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவது மற்றும் நடிப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பார்த்திபன். இவர் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்து இருந்தது. இதையடுத்து இவர் புது முயற்சியாக 96 மணி நேரம் ஒரே ஷாட்டில் நான் லீனியர் படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த படத்திற்கு இரவின் நிழல் என்று பெயரிட்டார். அது இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பலர் இந்த படத்தை பாராட்டி இருந்தனர். பலர் இந்த படம் ஒத்த செருப்பு போல் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் ஆனால் அது மாதிரி இல்லை என்று கூறிவிட்டு சென்றனர். இந்தப் படத்தில் யூடியூப் புகழ் பிரகிடா, வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ஒரே ஷாட்டில் எடுக்கிறேன் என்ற பெயரில் பார்த்திபன் கதையை கோட்டை விட்டுவிட்டார் என்றும், பார்க்கும் ரசிகர்கள் இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதா? அல்லது பல தடவை முயற்சி செய்து எடுக்கப்பட்டதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை திரைக்கதையும் படமும் தான். அதில் கோட்டை விட்டுவிட்டு ஒரே ஷாட்டில் எடுத்தேன் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். உலகிலேயே இது முதல் நாள் லீனியர் படம் என்று பார்த்திபன் கூறியிருந்தார் ஆனால் ஏற்கனவே 2013இல் ஒரு படம் நான் லீனியராக வெளி வந்தது என்றும், படத்திற்கு தேவை கதைதான் அதை விட்டுவிட்டு இது நான் லீனியரா?இல்லையா? என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று ப்ளூ சட்டை விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டுள்ளார். அதற்கு ப்ளூ சட்டை மாறனுக்கு காரசாரமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர்,விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ,சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக,நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.அதுசரி! எதுசரி என விளங்க! Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன்.

குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் ஸ்பெஷல் ஷோ பார்க்க அழைத்தேன்.அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம் (அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதையே! என்று அவரை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
