2019ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் “கைதி”. கார்த்தி, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், நரேன், ஜார்ஜ் மரியான் என பலர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 கோடி வசூலை தாண்டியது மட்டுமில்லாமல், நிறைய விருதுகளையும் வென்று குவித்தது.

அப்போது புரியவில்லை நமக்கு, லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய உலகத்தியே உருவாக்க இருக்கிறார் என்று. அடுத்த படமாக விஜயுடன் “மாஸ்டர்”. மிக பெரிய வெற்றி படமாக இது அமைந்து. கைதி படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை கமல்ஹாசனிடம் இருந்து பெற்ற லோகேஷ் அப்போது, “நான் இவர் படங்கள் பார்த்தே சினிமா கற்றுக்கொண்டேன், இப்போது இவர் கையிலேயே விருது வாங்கிவிட்டேன்” என பெருமையாக பேசினார்.

அப்போதும் நமக்கு தெரியாது, படுத்திருந்த கமலின் சினிமா மார்க்கெட்டை இவர் தான் ஜெட் வேகத்தில் பறக்க வைக்க போகிறார் என்று. ஜூன் 3 ஆம் தேதி வெளியான “விக்ரம்” படம் இந்த தலைமுறை பார்க்க தவறிய கமலை கண் முன் காட்டி, மொத்த தமிழகமே படத்தை கொண்டாடடும் அளவிற்கு செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி படம் 2 ஆந்திர மாநிலங்களிலும், கேரள, கர்நாடக என தென் இந்திய மாநிலங்களில் மிக பெரிய வசூலை பெற்று வருகிறது.

விக்ரம் படத்தை கைதி படத்துடன் இணைத்து அடுத்து படத்திற்கான பல வழிகளை திறந்து விட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ். இப்பொது அடுத்தடுத்து பேட்டிகள் அளித்து வரும் லோகேஷ், கைதி 2 படம் குறித்து ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது கைதி படத்தின் இறுதியில் அடைக்கலம் ஜெயிலில் இருந்து கொண்டே “சம்மந்தம் இருக்கு” என கூறி அடுத்தப்படத்திற்கான லீட் வைத்திருப்பார்.

பிரச்சனைகள் முடிந்து செல்லும் டில்லி கையில் ஒரு பையையும் கொண்டு செல்வர். கூடவே அவரது மகளையும் தூக்கி செல்வர், காமாட்சி அவருடன் செல்வது போல படம் முடியும். லோகேஷ் கூறுகையில் கையிலுள்ள பையில் தான் டில்லியின் மொத்த கதையும் இருக்கு. டில்லி ஒரு கபடி பிளேயர் எனவும் அடுத்த படத்தில் அவனுக்கும் அடைக்கலம் கும்பலுக்கும் இருக்கும் தொடர்பு மற்றும் கபடி வாழ்க்கை மற்றும் எவ்வாறு அவன் விக்ரமுடன் இணைகிறான் என கூறுகிறேன் என கூறியுள்ளார்.

விக்ரம் படத்தின் கடைசியில் வரும் “ரோலெக்ஸ்”(சூர்யா), தான் ஆட்கள் மற்றும் போதை பொருள்களை அழித்த அமர்(ஃபகத் ஃபாசில்), டில்லி(கைதி கார்த்தி) மற்றும் விக்ரம்(கமல்) 3 வரையும் பழி வாங்க கிளம்புவதாக படம் நிறைவு பெற்றுள்ளது. இதனால் விக்ரம் 3 படத்தில் அமர், டில்லி, விக்ரம் மூவரும் இணைத்து எவ்வாறு “ரோலெக்ஸுடன்” மோதி வெற்றி பெற போகிறார்கள் என்பதே கதை.
Video Courtesy – GalattaPlus