மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்டவுடன் வெட்கப்பட்டு சிரித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா

ஏற்கனவே அறிவித்து இருந்தபடி ஜூன் 11ம் தேதி இன்று தான் நயன்தாராவை முதல் முதலில் சந்தித்து கதை கூறிய ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து உள்ளனர் புது மண தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பெரிய ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர். முதலில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணம், பின்னர் சில காரணங்களால் சென்னைக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு தமிழ் முண்ணனி நடிகர்கள் பலரும் குடும்பத்துடன் வந்து இருந்தனர். ரஜினி, விஜய், சூர்யா, ஷாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பலர் கலந்து கொண்டனர். வந்தவர்களுக்கு 27 வகையான மெனுவுடன் பலே விருந்து பரிமாறப்பட்டது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்டவுடன் வெட்கப்பட்டு சிரித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 1

விளம்பரம்

திருமணத்தில் சிகப்பு நிற லெஹங்கா உடையுடன் கழுத்தில் 7 அடுக்கில் பல விலையுயர்ந்த கற்களுடன் கூடிய நகைகளை அணிந்து இருந்தார் நயன்தாரா. அதே போல் விக்னேஷ் சிவனும் வேஷ்டி, குர்தா, துண்டு அணிந்திருந்தார். இந்து முறைப்படி நயன்தாரா கழுத்தில் தாலி அணிவித்தார் விக்னேஷ். பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் என சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கினர். இந்த செயலால் அவரது ரசிகர்கள் அவரை மனதார வாழ்த்தி வருகின்றனர்.

தொடர்புடையவை  இனிமே நான் சிங்கள் இல்ல.! காதலர் தினத்தில் காதலியை அறிமுகம் செய்த காளிதாஸ் ஜெயராம்.!

மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்டவுடன் வெட்கப்பட்டு சிரித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா 3

விளம்பரம்

திருமணம் முடிந்து இருவரும் நேராக திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு செருப்பு காலுடன் நடக்க தடை செய்யப்பட்ட பகுதியில் செருப்புடன் நடந்து சென்று போட்டோஷூட் நடத்தியதால் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இன்று காலை மன்னிப்பு கோரி கடிதம் அளித்து இருந்தார் விக்னேஷ் . இந்த நிலையில் தற்போது இருவரும் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ஹனிமூன் எங்கே போகுறீர்கள் என்று கேட்க வெட்கப்பட்டு இருவரும் சிரித்தனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment