இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா.! புகைப்படத்துடன் பதிவிட்ட விக்னேஷ் சிவன்

வெளியிட்டது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி இருக்கும் புகைப்படங்களை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி சென்னை ரிசார்ட்டில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடிக்க சென்று விட்டார். விக்னேஷ் சிவனும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்க சென்று விட்டார் .திரும்பி வந்த இவர்கள் ஸ்பெயினுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். அங்கிருந்து திரும்பி அவர்கள் பற்றி ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது. அதாவது நயன்தாரா விரைவில் குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாகவும். அதனால் அவர் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் பரவியது.

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா.! புகைப்படத்துடன் பதிவிட்ட விக்னேஷ் சிவன் 1


ஆனால் இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் எந்த விதமான கருத்தும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் இரட்டை குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களாக இருப்பதை அவர் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவர் நயனும் நானும் அப்பா அம்மா ஆகி விட்டோம். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இரண்டுமே ஆண் குழந்தைகள். இந்த குழந்தைகள் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் நமக்கு இந்த இரட்டை குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்ட வடிவில் கிடைத்துள்ளது. உங்களின் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டுமென்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் தத்து எடுத்திருக்கிறார்களா? அல்லது வாடகைத்தாய் மூலம் பெற்று இருக்கிறார்களா என்பது குறித்தும், குழந்தைகள் குறித்த எந்த விபரமும் தெரியவில்லை

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்