அலப்பறை செய்யும் வடிவேலு…தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்”!!”சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்”

அலப்பறை செய்யும் வடிவேலு...தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்"!!"சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்" 1

ரஜினி, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வர போகும் நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் இப்பொது அதிகாரபூர்வமாக துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு மட்டுமே இப்போதைக்கு நடிகர்களாக ஒப்பந்தமாக, எம்.எம்.கீரவாணி இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டத்தரணி செட் அமைக்கவுள்ளார். லைகா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ளார்.

விளம்பரம்

அலப்பறை செய்யும் வடிவேலு...தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்"!!"சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்" 3

இப்பொது இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் துவங்கியுள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், ராதிகா சரத்குமார் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். சந்திரமுகியாக நடிக்க லட்சுமி மேனன், திரிஷா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா போன்றோரிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டாலும் இப்பொது வரையில் யார் நாயகையாக நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியாகவில்லை.

விளம்பரம்

அலப்பறை செய்யும் வடிவேலு...தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்"!!"சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்" 5

முதல் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நடிகர் வடிவேலுவின் காமெடி. மிக பெரிய அளவில் அவருடைய காமெடி அப்படத்தில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் ரசிக்கப்பட்டது. இந்த படத்திலும் வடிவேலு காமெடி ரோலில் நடித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை ராதிகா ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். படப்பிடிப்பின் கேப்பில் ராதிகா, லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது சுறா படத்தில் இடம்பெற்ற கச்சேரி சீனை நினைவுப்படுத்தி அதனை ரீகிரியேட் செய்துள்ளார் நடிகர் வடிவேலு. அவர் செய்ததை சிரித்தப்படியே வீடியோ எடுத்துள்ள ராதிகா அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

விளம்பரம்

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment