தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..!

தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தனது இரண்டு இரட்டை மகன்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 1

விளம்பரம்

தனது தாய் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் அவர் கொண்டாடி இருக்கும் கிறிஸ்மஸ் விழா புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா 2002ம் ஆண்டு மலையாள படம் ஒன்றில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 3

விளம்பரம்

பின்னர் தமிழில் 2005ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கும் மேல் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னப்பூரணி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே அடுத்த கதையை மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மும்மரம் காட்டி வருகிறார் நயன்தாரா.

தொடர்புடையவை  காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கும் ஊர்வசி.! ஊர்வசியின் 700-வது படம் "அப்பத்தா" ட்ரைலர் இதோ.!

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 5

விளம்பரம்

குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் ‘டெஸ்ட்’ என்கிற படத்திலும், ‘மண்ணாங்கட்டி’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் உதடு பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் லிப் பாம் கம்பெனி ஒன்றையும், தோல் பராமரிப்பு சாதனங்கள் விற்கும் ‘9 ஸ்கின்கேர்’ என்கிற இரண்டு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 7

விளம்பரம்

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சென்னையில் தனியார் ரிசார்ட்டில் வைத்து 2022ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 9

விளம்பரம்

 

இந்த திருமணத்திற்கு பின்னர் ஓர் ஆண்டுகளுக்கு உள்ளாகவே வாடகைத் தாய்முறையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி இருந்தனர். இது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்ட போதும், சரியான விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் நயன்தாரா.

விளம்பரம்
தொடர்புடையவை  இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் நபர் இவரா...? வெளியான முக்கிய தகவல்..!

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 11

இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வீக் என்று பெயர் வைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். மகன்களின் முகத்தை சமீபத்தில் அனைவருக்கும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருந்த அவர், தொடர்ந்து மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 13

அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். தனது கணவர், தாயார் மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் சான்டா கிளாஸ் போல சிகப்பு நிற ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

தனது இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.! புகைப்பட ஆல்பம் இதோ..! 15

அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment