விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘நீ நான் காதல்’ தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகருக்கு தற்போது திடீரென திருமணம் முடிந்திருக்கிறது. அந்த திருமண புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகில் பல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் தான் ‘நீ நான் காதல்’. இந்தத் தொடரில் பிரேம் ஜேக்கப் ஹீரோவாக நடிக்க, வர்ஷினி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சாய் காயத்ரி, சங்கரேஷ் குமார் ஆகிய இருவரும் இரண்டாவது கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.
ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பான ஹிந்தி தொடரான ‘இஸ் பியார் கோ கியா நாம் தூண்’ என்கிற தொடரின் தமிழாக்கம் தான் இந்த நாடகம். இந்த நாடகத்தை ராஜன் சுந்தரம் என்பவர் இயக்கி வருகிறார்.்ஒரு நடுத்தர ஏழை வீட்டுப் பெண் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ராகவை சந்திக்கிறார். அதன் பின்பு என்ன நடந்தது? அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? என்கிற கதை தான் இந்த நாடகத்தின் மையக்கரு.
இந்த நாடகம் முதலில் மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது நல்ல வரவேற்பு பெற்று இருப்பதால் இரவு 10 மணிக்கு சீரியலின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரேம் ஜேக்கப் இருக்கும் நடிகை சுவாசிகாவிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இருவரும் மலையாளத்தில் ‘மனம் போல் மாங்கல்யம்’ என்கிற சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த போது காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
சுவாசிகா நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான ‘சாட்டை’ படத்தில் சமுத்திரக்கனி மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் ‘அப்புச்சி கிராமம்’ போன்ற சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். ‘
நீ நான் காதல்’ என்கிற நாடகத்தின் மூலமாக முதல் முறையாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணத்தை முடித்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் உயர்ந்திருந்தனர். பலரும் இந்த க்யூட்டான தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.