Categories: சினிமா

தன்னை பற்றி போடப்பட்ட மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் குறித்து முதல் முறையாக பேசிய நெல்சன்..என்ன சொன்னார் தெரியுமா?

வெளியிட்டது

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இந்த படங்களின் வெற்றிக்குப் பின்னர் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவை வைத்து பெரிய பட்ஜெட்டில் பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற இயலவில்லை. படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இதனால் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் அடுத்த படமான தலைவர் 169க்கு சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் தோல்வியால் நெல்சனுடன் இணைந்து பணியாற்ற தயங்கி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தன்னை பற்றி போடப்பட்ட மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் குறித்து முதல் முறையாக பேசிய நெல்சன்..என்ன சொன்னார் தெரியுமா? 1

நெல்சனுக்குப் பதிலாக வேறோரு இயக்குனர் படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படியே நெல்சன் இயக்கினால் திரைக்கதையை கேஎஸ் ரவிக்குமாரிடம் ரஜினி ஒப்படைத்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் இது எதுவுமே உறுதிப்படுத்தப்பட வில்லை. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இருந்தது. நான்கு வருடங்களுக்குப் பின்பு கமலின் படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இதனால் ஏகத்துக்கும் குஷியில் இருந்த கமல் லோகேஷுக்கு சொகுசு கார் ஒன்றையும், உதவி இயக்குனர்கள் 13பேருக்கு பைக் என பரிசை அள்ளி குவித்திருந்தார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட தோல்விக்கு காரணமாக இருந்த்நெல்சனை வச்சி செய்து விட்டனர். கமல் லோகேஷுக்கு கார் வழங்கியதைப் போல விஜய் நெல்சனுக்கு ஏரோபிளேன் வழங்குவார் என்பது போன்ற மீம்ஸ்களை பறக்க விட்டு வந்தனர். இதை பார்த்து லோகேஷ், நெல்சன் எனக்கு நல்ல நண்பர், ஓட்டுவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. ஓவராக ஓட்டாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். இதனால் நெல்சன் மீதான ட்ரோல்ஸ் சிறது குறைந்துள்ளது.

இது பற்றி நெல்சன் இதுநாள் வரையில் வாய் திறந்ததே இல்லை. ஆனால் ஒரு தனியார் யூடியூப் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது பூஜா ஹெக்டே தன்னுடன் ஆட வருமாறு நெல்சனை அழைத்தார். ஆனால் நெல்சன் வர மறுக்கவே கட்டாயப்படுத்தி அவரை அழைத்து வந்தனர். மேடைக்கு வந்த அவர் மைக்கை வாங்கி நான் ஆல்ரெடி நல்லா மாட்டிக்கிட்டு இருக்கேன்..என்னை இழுத்திவிடாதீர்கள், நான் சைலண்டாக கீழேயே உக்காந்து கொள்கிறேன் என்று நழுவி ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்