பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் தான் அதிதி சங்கர். தெலுங்கு சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மாவீரன் படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமைந்தது. வரிசையாக கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் இவருக்கு அடுத்ததாக வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
தற்போது இப்படத்தின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது . ரசிகர்கள் படம் வெற்றிபெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : T series