ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவிற்கும், சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளது பிரபல தனியார் தொலைக்காட்சி ஜீ தமிழ். இதனை பார்த்த பலரும் அந்த சேனலை திட்டி தீர்த்து வருகின்றனர். ராஜ்கிரண் பாவம் உங்களை சும்மா விடாது என்று அந்த சேனலை திட்ட தொடங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். தமிழின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜ்கிரண். எதார்த்தமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா, சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து விட்டதாகவும், ராஜ்கிரணை விட்டு பிரிந்து முனீஸ் ராஜாவுடன் சென்று விட்டதாகவும் தகவல் பரவியது. இந்த தகவலை ஒரு வீடியோவாக வெளியிட்டு முனீஸ் ராஜாவே உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்துவிட்டு பலரும் ராஜ்கிரணிடம் விளக்கம் கேட்க, அவரும் தனது முகநூல் பக்கத்தில் மிகப்பெரிய விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில் பிரியா என்கிற பெண்ணை தான் வளர்த்து வந்தவதாகவும், அவர் தன்னுடைய மகளே இல்லை என்றும், முனீஸ் ராஜா பணத்திற்கு ஆசைப்பட்டு உன்னை காதலிக்கிறான் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அந்த பெண் கேட்காமல் அந்த நபருடன் சென்றுவிட்டார் என்றும் ராஜ்கிரண் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் பணத்திற்காக ஆசைப்படும் ஈனப்பிறவி முனீஸ் ராஜா, எந்த காலத்திலும் முனீஸ் ராஜா தனது மருமகன் ஆக முடியாது, ஜீனத் பிரியா நான் பெற்ற மகளே இல்லை அவர் நான் வளர்த்த மகள் என காட்டமாக பதில் அளித்து இருந்தார். இதற்கு மீண்டும் பதில் அளிக்கும் விதமாக தனது மனைவி பெயரில் 50 லட்சத்தில் வீடு கட்டி வருவதாகவும், சுய தொழில் தொடங்க இருப்பதாகவும் முனீஸ் ராஜா பதிலடி கொடுத்திருந்தார்.
பிரச்சனை சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் முனீஸ் ராஜா மற்றும் ஜீனத் பிரியாவை அழைத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சி திருமணத்தை நடத்தி வைத்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் தங்கள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என இருவரும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த திருமணத்தை நடத்தி வைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சியை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ராஜ்கிரணின் பாவம் உங்களை சும்மா விடாது, பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்த ராஜ்கிரனை எதிர்த்து விட்டு இந்த பெண் இவ்வாறு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வார், அவர்களை அழைத்து நீங்கள் இப்படி திருமணம் செய்து வைக்கிறீர்களே? என்று நெட்டிசன்கள் அந்த தொலைக்காட்சிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Zee Tamil