சீரியல் வரலாற்றில் முதல் முறை.! ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லீம் பெண்ணை பாராட்டும் ஆங்கில ஊடகங்கள்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை பாராட்டி தற்போது ஆங்கில நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. தேசிய அளவில் ஹிஜாப் அணிந்து நடித்துவரும் ஒரு முஸ்லிம் நடிகை என்கிற பெருமையை எதிர்நீச்சல் தொடரில் வரும் ஷீபா ஷெரின் பெற்றிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள், பெரியவர்கள் இளைஞர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் இந்த சீரியல் பெற்று டி ஆர் பி ரேட்டிங்கிலும் டாப் ஹிட்டில் இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சீரியல் வரலாற்றில் முதல் முறை.! ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லீம் பெண்ணை பாராட்டும் ஆங்கில ஊடகங்கள்.! 1

இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் என்று சமீபத்தில் சீரியல் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இது இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் நடிகர்கள் மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த், விபு ராமன் நடிகைகள் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண்கள் ஆணாதிக்கம் படைத்த வசதி படைத்த வீட்டிற்கு மருமகள்களாக வந்த பின்னர் என்ன நடக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது, ஆணாதிக்கத்தால் எவ்வாறு அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்த கதையாக இது இருந்து வருகிறது.


பெண் அடிமைத்தனத்திற்கு குரல் கொடுத்தப்பது, ஆண்களை எதிர்த்து புரட்சிகரமாக கேள்வி கேட்பது என்று இந்த சீரியலின் மருமகள்கள் கலக்கி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு உதவியாளராக ஃபர்ஹானா என்கிற கதாபாத்திரத்தில் ஷீபா ஷெரின் நடித்து வருகிறார். தற்போது இவர் பற்றிய செய்தி ஒன்று ஆங்கில நாளேட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த செய்தியை ஷீபா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். திருச்செல்வம் ஷீபா ஷெரினை நடிக்க வைக்க ஆடிஷன் நடத்திய போது ஷீபா முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறார், ஹிஜாப் அணிந்தவாறு தான் நடிப்பேன் என்று திருச்செல்வத்திடம் கூற அவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

இந்த செய்தி தற்போது தேசிய அளவில் கவனிக்கப்படும் செய்தியாக இருக்கிறது. தேசிய ஊடகம் ஒன்று தற்போது இது குறித்து தனது பத்திரிக்கை செய்தியில் தலையங்கத்துடன் முக்கிய செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதில் தேசிய தொலைக்காட்சி ஒன்றிலும், சீரியல் வரலாற்றிலும் முதல் முறையாக ஹிஜாப் அணிந்து முஸ்லிம் நடிகை ஒருவர் நடித்து வருவது இதுவே முதல் முறை என்று ஊடகங்கள் பலர் ஷீபா ஷெரினுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இந்த செய்தியை ஷீபா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்