பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தற்போது தனம் மூர்த்தி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த அழகிய ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது மூத்த மருமகளாக இருக்கும் தனம் கர்ப்பிணியாக இருக்கிறார். அதே சமயம் அவருக்கு மார்பக புற்றுநோயும் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துவிட்டு அவருக்கு கதிரியக்க அறுவை சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அனைவரும் ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Television