Categories: சினிமா

ரஜினியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து படமா? இயக்குநர் சிவாவின் புதிய திட்டம்!

வெளியிட்டது
ரஜினியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து படமா? இயக்குநர் சிவாவின் புதிய திட்டம்! 1

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தந்தவர் இயக்குநர் சிவா. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தை வைத்து தலைவர் 168 என்ற படத்தை இயக்க உள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது . ஏற்கனவே ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சிவா, விரைவில் விஜய்யுடன் இணைந்து படம் எடுக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பிகில் படத்தை முடித்துவிட்டு, விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 என்ற படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் 20 நாட்கள் நடக்கிறது. இதில், விஜய் சேதுபதியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்