சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘திருமகள்’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நிவேதிதாவிற்கு தற்போது இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே நடிகர் ஒருவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் தனது புது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்ட செய்தியை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘மகராசி’, ‘வாணி ராணி’, ‘கல்யாண பரிசு’, போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நிவேதிதா பங்கஜ். ‘சுந்தரி’ சீரியலிலும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார்.
இதற்கு முன்பு ‘மகராசி’ சீரியல் நடிகர் எஸ்.எஸ் ஆர்யன் என்பவரை அவர் திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிகள் சில வருடங்களுக்கு முன்பே பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிந்த செய்தி பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ‘திருமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் சுரேந்தருடன் நிவேதிதா காதலில் விழுந்தார்.
இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் தற்போது இவர்கள் தங்களது காதலை உறுதி செய்திருக்கின்றனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்படும் போட்டோ ஷூட்டுகளையும் அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் நிவேதிதாவை மோசமாக விமர்சித்து வந்தனர். ஆரியனுடன் திருமணமான நிலையில், அவரை விவாகரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணமா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளித்து நிவேதிதா பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
அதில், “தனக்கு விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. நான் தற்போது புது வாழ்க்கையை தொடங்க போகிறேன் தயவு செய்து என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். மோசமான கேள்விகளை கேட்பதை விடுங்கள். உங்களுடைய புரிதலுக்கு நன்றி” என்று அவர் பகிர்ந்திருக்கிறார்.